கோராபுட்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோராபுட் (Koraput) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத் தலைமையிட நகரமும், நகராட்சி மன்றமும் ஆகும்.

விரைவான உண்மைகள் கோராபுட், நாடு ...

சுற்றுலாத் தலமான கோராபுட் நகரத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் கொண்ட தேவ்மாலி மலைத்தொடர்களும், குப்தேஷ்வர் குகைகளும், தூத்மா அருவியும் உள்ளது.

கோராபுட் நகரம் விசாகப்பட்டினத்திலிருந்து 214 கி.மீ. தொலைவிலும்; புவனேஸ்வரிலிருந்து 504 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Remove ads

பழங்குடிகள்

Thumb
கோராபுட் பழங்குடிகள், ஒடிசா

இந்தியாவின் பழங்குடிகள் வளையத்தின் ஒரு பகுதியாக தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் விளங்குகிறது.

கோராபுட் நகரம் தொழில்மயமாதல், நகர்மயதால் விளைவாக காடுகள் அழிக்கப்படுவதால், இப்பகுதி வாழ் பழங்குடி மக்களின் பண்பாடு, நாகரீகம், தொழில் முறைகள் பெரிதும் மாறிவருகிறது.[2] கோராபுட் ஜெகன்நாதர் கோயில் தலத்தை சபர சிறீ சேத்திரம் என்றழைப்பர்.

Thumb
கோராபுட் ஜெகன்நாதர் கோயில்

புவியியல்

18.82°N 82.72°E / 18.82; 82.72 பாகையில் கோராபுட் நகரம் அமைந்துள்ளது.[3] கோராபுட் கடல் மட்டத்திலிருந்து 870 மீட்டர் உயரத்தில் உள்ளது.

வம்சதாரா ஆறு, மேச்சகுந்தா ஆறு மற்றும் கோலப் ஆறுகள் கோராபுட் நகரத்திலும், சுற்றிலும் பாய்கிறது. நகரத்தைச் சுற்றியிலுள்ள சந்திரகிரி மற்றும் தேவ்மாலி மலைகளில் தூத்மா, பக்ரா மற்றும் கண்டஹத்தி அருவிகள் நீரைக் கொட்டுகிறது. 8807 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோரபுட் நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 47,468 ஆகும்.[4]

Remove ads

பொருளாதாரம்

கோராபுட் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுனபேடாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மிக் மற்றும் சுகோய் போர் வானூர்திகளின் மோட்டார் இயந்திரங்களை தயாரிக்கிறது.

கோராபுட் நகரத்தை ஒட்டியுள்ள தமஞ்சோடியில் தேசிய அலுமினியம் நிறுவனத்தின் (NALCO) சுரங்கங்கள் உள்ளது.

போக்குவரத்து

தொடருந்து வசதிகள்

கோராபுட் நகரத்தின் தொடருந்து நிலையம், புவனேஸ்வர், புரி, கட்டக், ஜெகதல்பூர், ராய்ப்பூர், ரூர்கேலா, ஹவுரா, விஜயநகரம் மற்றும் விஜயவாடா நகரங்களை இருப்புப் பாதை மூலம் இணைக்கிறது.[5]

சாலை வசதி

ராய்ப்பூரையும், விசாகப்பட்டினத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 26 (43) கோராபுட் நகரத்தின் வழியாக செல்கிறது. விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்திலிருந்து ஜெய்ப்பூர், உமர்கோட், ஜெகதல்பூர் வழியாக செல்லும் பேருந்துகள் கோராபுட் வழியாக செல்கிறது.

Remove ads

கல்வி

தட்பவெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், கோராபுட், ஒடிசா, மாதம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads