கோலியாத் செம்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலியாத் செம்பகம் (Goliath coucal-சென்ட்ரோபசு கோலியாத) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் சிற்றினம் ஆகும். இது வடக்கு மலுக்கு தீவுகளில் காணப்படுகிறது. இது ஒரு அகணிய உயிரி. நுரை-வெள்ளை இறக்கை திட்டுகளுடன் கூடிய ஒரு பெரிய கருப்பு குயில் இது. அரிய வெளிறிய வடிவங்களும் வெளிறிய தலைகள் மற்றும் இவற்றின் உடலில் மாறக்கூடிய இறகுப் பகுதிகளைக் கொண்டிருக்கும். குஞ்சுகள் பொதுவாகக் கருமையான வயது வந்தவர்களைப் போன்று காணப்படும். ஆனால் கீழ்ப்பகுதியில் கசுகொட்டை நிறத்திலிருக்கும். காடுகளின் அடிப்பகுதியிலும், அருகிலுள்ள அடர்ந்த அடிமரங்களிலும் அடர்ந்த சிக்குகளுக்குள் இணையாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன. பெரும்பாலும் இவற்றின் ஓசையின் மூலம் கண்டறியப்படுகின்றன.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads