செம்பகம் (பேரினம்)

From Wikipedia, the free encyclopedia

செம்பகம் (பேரினம்)
Remove ads

செம்பகம் (Coucal) என்பது குயில் குடும்பத்தில் உள்ள சுமார் 30 சிற்றினங்கள் அடங்கிய பேரினமாகும். இவை அனைத்தும் சென்ட்ரோபோடினே துணைக்குடும்பத்தில் சென்ட்ரோபசு பேரினத்தினைச் சேர்ந்தவை. பல பழைய உலகக் குயில்களைப் போலல்லாமல், செம்பகம் குஞ்சு பொரிக்கும் ஒட்டுண்ணிகள் அல்ல. இவை இனப்பெருக்கத் தனித்தன்மையைக் கொண்டிருந்தாலும், இந்தப் பேரினத்தைச் சேர்ந்த அனைத்து பறவைகளும் (மாறுபட்ட அளவுகளில்) பாலினப் பணி வேறுபாட்டினைக் கொண்டுள்ளன. இதனால் சிறிய ஆண் குஞ்சுகளைக் கவனிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. கரும் செம்பகம், பலகணவர் மணம் கொண்டவையாகும்.[1] சில இனங்கள் (செண்ட்ரோபசு பாசியானினசு) ஆண் அடைகாத்துப் பெற்றோரின் பராமரிப்பில் அதிக காலம் ஈடுபடுகின்றன.[2]

விரைவான உண்மைகள் செம்பகம், உயிரியல் வகைப்பாடு ...
Thumb
இந்தியாவின் ஐதராபாத்தில் பெரும் செம்பகம், சென்ட்ரோபசு சினென்சிசு
Remove ads

வகைப்பாட்டியல்

பேரினம் செண்ட்ரோபசு 1811ஆம் ஆண்டில் செருமனி விலங்கியல் நிபுணர் யொஃகான் இல்லிகெர் வில்ஹெல்ம் இல்லிகர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இந்த மாதிரி இனங்கள் 1840-ல் ஜார்ஜ் ராபர்ட் கிரே என்பவரால் செனகல் செம்பகம் என நியமிக்கப்பட்டது.[4][5] பேரினப் பெயர் பண்டைக் கிரேக்க கென்ட்ரான் அதாவது "குதிமுள்" அல்லது "கூர்முனை" உடன் போவுசு "பாதம்" என்று பொருள்படும்.[6]

விளக்கம்

பல செம்பகங்களின் பின்னங்கால் விரலில் நீண்ட நகங்கள் உள்ளன. கால்களில் சிறிய குதிமுள் உள்ளது. மேலும் இது ஸ்போரென்குக்குக்கே என்ற செம்பகங்களுக்கான செருமன் வார்த்தைக்குக் காரணமாகும். இதனுடைய பொதுவான பெயர் பிரெஞ்சு கூகோ மற்றும் அலுவெட்டிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் (நகம் போன்ற நீண்ட வானம்பாடி). (குவியர், நியூட்டன் 1896-ல்) நகத்தின் நீளம் ஆப்பிரிக்க கறுப்பு செம்பகம் கு. கிரில்லி மற்றும் சிறிய செம்பகம் கு. பெங்காலென்சிசில் உள்ள கணுக்கால் எலும்பின் நீளத்தின் 68-76%ஆக இருக்கலாம். குறுகிய நகச் செம்பகம் கு. ரெக்டுங்குயிசு மட்டுமே கால் நக நீளம் கணுக்கால் எலும்பின் நீளம் 23% உள்ளது. நூல் போன்ற இறகுகள் (வளரும் இறகுகளின் நீளமான உறைகள் சில சமயங்களில் ட்ரைக்கோப்டைல்கள் என அழைக்கப்படுகின்றன[7][8]) குஞ்சுகளின் தலை மற்றும் கழுத்தில் காணப்படுகின்றன. இவை 20 மி.மீ. வரை நீளமாக இருக்கும். கூடுகள் முட்படுக்கைப் போலத் தோற்றமளிக்கும். பல சந்தர்ப்பவாத வேட்டையாடுபவர்களாக உள்ளன.[9] அதே சமயம் வெள்ளை-புருவம் கொண்ட செம்பகம் புல் தீயின் புகையினால் ஈர்க்கப்படும் பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகளை வேட்டையாடுகின்றன.[10] :17

செம்பகம் பொதுவாக அடர்த்தியான தாவரங்களுக்குள் கூடுகளை உருவாக்குகின்றன. இவை பொதுவாக மேல்பகுதியை மூடியிருக்கும் ஆனால் சில சிற்றினங்களின் கூடுகளின் மேல்பகுதி திறந்திருக்கும். பெசண்ட் செம்பகம், சென்ட்ரோபசு பாசியானினசு, பெரும் செம்பகம், செ. சினென்சிசு மற்றும் மடகாசுகர் செம்பகம் செ. டூலூ சில சமயங்களில் திறந்த கூடு கட்டுகின்றன. சில சிற்றினங்கள் எப்போதும் திறந்த கூடுகளை உருவாக்குகின்றன (குடா செம்பகம், செ. செலிபென்சிசு).[10]:120

சில செம்பக சிற்றினங்கள் தங்கள் குஞ்சுகளைச் சுமந்து கொண்டு பறப்பதைக் காணலாம்.[11]

Remove ads

சிற்றினங்கள்

இந்த பேரினத்தில் 29 சிற்றினங்கள் உள்ளன:[12]

  • குஞ்சத்தலை செம்பகம், சென்ட்ரோபசு மைலோ
  • வெண்கழுத்து செம்பகம் அல்லது கருப்பு வெள்ளை செம்பகம், சென்ட்ரோபசு அட்டரல்பசு
  • ஐவரி-அலகு செம்பகம் அல்லது பெரிய கருப்பு செம்பகம், சென்ட்ரோபசு மென்பெக்கி
  • பயாக் செம்பகம், சென்ட்ரோபசு சாலிபெசு
  • செம்பழுப்பு செம்பகம், சென்ட்ரோபசு யூனிரூபசு
  • பச்சை அலகு செம்பகம், சென்ட்ரோபசு குளோரோஹைஞ்சோசு
  • கறுமுக செம்பகம், சென்ட்ரோபசு மெலனோப்சு
  • கருந்தலை செம்பகம், சென்ட்ரோபசு ஸ்டீரி
  • குட்டைக் கால் செம்பகம், சென்ட்ரோபசு ரெக்டங்குயிசு
  • குடா செம்பகம், சென்ட்ரோபசு செலிபென்சிசு
  • காபோன் செம்பகம், சென்ட்ரோபசு அன்செல்லி
  • கறுந்தொண்டை செம்பகம், சென்ட்ரோபசு லுகோகாசுடர்
  • செனகல் செம்பகம், சென்ட்ரோபசு செனகலென்சிசு
  • நீல-தலை செம்பகம், சென்ட்ரோபசு மோனாச்சசு
  • செப்பு வால் கொண்ட செம்பகம், சென்ட்ரோபசு குப்ரிகாடஸ்
  • வெள்ளை-புருவம் கொண்ட செம்பகம், சென்ட்ரோபசு சூப்பர்சிலியோசசு
  • பருசெல் செம்பகம், சென்ட்ரோபசு பருசெல்லீ
  • சுந்தா செம்பகம், சென்ட்ரோபசு நிக்ரோரூஃபசு
  • செம்போத்து, சென்ட்ரோபசு சினென்சிசு
  • மலகாசே செம்பகம் அல்லது மடகாசுகர் செம்பகம், சென்ட்ரோபசு தவுலோ
  • கோலியாத் செம்பகம், சென்ட்ரோபசு கோலியாத்
  • கருஞ்செம்பகம், சென்ட்ரோபசு கிரில்லி
  • பிலிப்பீன்சு செம்பகம், சென்ட்ரோபசு விரிடிசு
  • சின்ன செம்பகம், சென்ட்ரோபசு பெங்காலென்சிசு
  • செந்நீல செம்பகம், சென்ட்ரோபசு வையலாசெயசு
  • கறுப்பலகு செம்பகம் அல்லது இளம் கருப்பு செம்பகம், சென்ட்ரோபசு பெர்ன்சுடைனி
  • காய் செம்பகம், சென்ட்ரோபசு இசுபிலோப்டெரசு
  • பெசண்ட் செம்பகம், சென்ட்ரோபசு பாசியானினசு
  • அந்தமான் செம்பகம் அல்லது பழுப்பு செம்பகம், சென்ட்ரோபசு அந்தமனென்சிசு

ஒரு புதை படிவ இனம், சென்ட்ரோபசு கோலோசசு, தெற்கு ஆத்திரேலியாவின் டான்டனூலாவில் உள்ள குவாட்டர்னரி வயதுடைய புதை படிவ குகையிலிருந்து அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads