கோ. போ. இராதாகிருஷ்ணன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோ. போ. இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan)(பிறப்பு 1957) என்பவர் சி. பி. ஆர். என அறியப்படுபவர் ஆவார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டரும் ஆவார். இவர் 18 பிப்ரவரி 2023 அன்று ஜார்கண்ட் ஆளுநராக பதவியேற்றார்.
Remove ads
பாஜக தலைவராக
இவர் பாஜ கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் ஆவார். இவர் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக கருதப்பட்டது. தற்போது இவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார்.[3] இவர் 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.[4] இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
Remove ads
மக்களவை தேர்தலில்
இராதாகிருஷ்ணன் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[5] 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இத்தேர்தல்களில் இராதாகிருஷ்ணன் 1998-ல் 150,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.[7]
2004 ல் திராவிட முன்னேற்றக் கழகம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முடிவுக்குக் வந்த பிறகு, கூட்டணி அமைப்பதில் பணியாற்றிய மாநிலத் தலைவர்களில் ஒருவர் இவர்.[8] இராதாகிருஷ்ணன் பின்னர் 2004 தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உறவுகளை ஏற்படுத்த மாநில கட்சியுடன் இணைந்து பணியாற்றினார்.[9]
2012ல், மேட்டுப்பாளையத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க தொண்டரைத் தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.[10]
இவர் தெற்கு மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க.வின் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். ஆர். எஸ். எஸ். மற்றும் ஜன சங்கத்துடன் 1973 முதல் தொடர்பில் உள்ளார். 2014-ல், இவர் கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாஜக வேட்பாளராகப் பெயரிடப்பட்டார். மேலும் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி இல்லாமல், இவர் 3,89,000 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் கோயம்புத்தூரிலிருந்து 2019 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[11]
Remove ads
வகித்த பதவிகள்:[12]
- 1998-12வது மக்களவை உறுப்பினர்
- 1998–99. உறுப்பினர், வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு
- உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
- 1999. 13வது மக்களவை உறுப்பினர் (2வது முறை)
- 1999–2000. உறுப்பினர், வணிகக் குழு
- உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
- 2000– உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
- 2023 - ஜார்கண்ட் ஆளுநர்
போட்டியிட்ட தேர்தல்
Remove ads
வெளி இணைப்புகள்
- இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ சுயசரிதை ஓவியம் (12 வது மக்களவை)
- இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ சுயசரிதை ஓவியம் (13 வது மக்களவை)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads