2004 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.
Remove ads
பின்புலம்
- இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர்.
- முந்தைய 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வாஜ்பாயின் ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதும் முடிவடைந்ததையடுத்து.
- இந்திய அரசியல் வரலாற்றிலே ஐந்தாண்டுகள் நீடித்த முதல் காங்கிரசு அல்லாத அரசு இதுவேயாகும்.
- இந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்ற பிரச்சாரத்தை இத்தேர்தலில் பாஜக மேற்கொண்டது.
- ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வென்றது.
- இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வலுவான மாநிலக் கட்சிகளின் கூட்டணியும் நகர மக்களிடம் மட்டுமே செல்லுபடியான “இந்தியா ஒளிர்கிறது” பிரச்சாரமும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்களாக சொல்லப்பட்டன.
- காங்கிரஸ் கட்சி இம்முறை வெற்றி பெற்றாலும் தொங்கு நாடாளுமன்றமாகவே அமைந்தபோதிலும் தேர்தலுக்குப் பிறகு மேலும் சில மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவளித்ததால் காங்கிரஸ் தலைமையில் “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி” உருவாக்கியது.
- இதற்கு இடதுசாரி கட்சிகளின் 60 உறுப்பினர்களும் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முன் வந்தனர்.
- ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி பிரதமராக பதவி வகிக்க முன் வந்த நிலையில் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காதவர் என்று காரணம் சொல்லி அவரை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று அன்றைய இந்திய குடியரசு தலைவரான அப்துல் கலாமிடம் எதிர்கட்சியில் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.
- இதையடுத்து இந்திய உயர் நீதிமன்றம் சோனியா காந்தி பிறப்பால் இட்டாலியர் ரோமானிய பிரஜை என்றாலும் ராஜீவ் காந்தியை மணந்து கொண்டதால் அவரின் இரத்த உறவால் இந்திய பிரஜை என்று தீர்ப்பளித்து சோனியா காந்தி பிரதமராக நாடாளும் தகுதி உடையவர். என்று தீர்ப்பளித்தது என்றாலும் எதிர் கட்சியினரின் பலமான விமர்சனங்களை காரணம் காட்டி பெருந்தன்மையாக தனக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் ஆக்கினார்.
Remove ads
முடிவுகள்
கட்சிகள் வாரியாக முடிவுகள்
மாநிலங்கள் வாரியாக
Remove ads
தேர்தலுக்குப் பிந்தய கூட்டணிகள்
- ஐக்கிய் முற்போக்குக் கூட்டணி: 275
- இந்திய தேசிய காங்கிரசு: 145
- சமாஜ்வாதி கட்சி: 39
- இராச்டிரிய ஜனதா தளம்: 21
- திராவிட முன்னேற்றக் கழகம்: 16
- தேசியவாத காங்கிரஸ் கட்சி: 9
- கேரளா காங்கிரஸ் கட்சி: 2
- பாட்டாளி மக்கள் கட்சி: 6
- தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி: 5
- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா: 5
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்: 4
- லோக் சன சக்தி கட்சி: 3
- ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக் கட்சி: 1
- இந்தியக் குடியரசுக் கட்சி: 1
- இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்: 1
- பாரதிய ஜனதாக் கட்சி 185
- பாரதிய ஜனதா கட்சி: 138
- சிவசேனா: 12
- பிஜு ஜனதா தளம்: 11
- அகாலி தளம்: 8
- ஐக்கிய ஜனதா தளம்: 7
- தேசியவாத திரிணாமுல் காங்கிரஸ்: 2
- நாகாலாந்து மக்கள் முன்னணி: 1
- மிசோ தேசிய முன்னணி: 1
- இடதுசாரிகள்: 60
- இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்கசிஸ்ட்): 43
- இந்திய பொதுவுடமைக் கட்சி: 10
- புரட்சிகர சோசலிசக் கட்சி: 3
- அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக்: 3
- சுயேட்சை: 1
- இதர கட்சிகள்: 78'
- பகுஜன் சமாஜ் கட்சி: 17
- தெலுங்கு தேசம் கட்சி: 5
- மதசார்பற்ற ஜனதா தளம்: 4
- ராஷ்டிரிய லோக் தளம்: 3
- அசோம் கன பரிசத்: 2
- ஜம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி: 2
- இந்தியாக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி: 1
- லோக் தந்திரீக் ஜன் சமதா கட்சி: 1
- அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ=இத்தீஹாதுல் முஸ்லீமன்: 1
- பாரதீய நவசக்திக் கட்சி: 1
- தேசிய லோக்தந்திரீக் கட்சி: 1
- சிக்கிம் ஜனநாயக முன்னணி: 1
- சமாஜ்வாதி ஜனதாக் கட்சி (ராஷ்டிரீய): 1
- சுயேட்சைகள்: 3
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads