ஜகார்த்தா

இந்தோனேசியாவின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

ஜகார்த்தா
Remove ads

சகார்த்தா அல்லது சகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதி (ஆங்கிலம்: Jakarta அல்லது Special Capital Region of Jakarta; இந்தோனேசியம்: Jakarta அல்லது Daerah Khusus Ibukota Jakarta) என்பது இந்தோனேசியாவின் தலைநகரம் ஆகும். முன்பு ஒல்லாந்து (Holland) என்று அழைக்கப்பட்ட நெதர்லாந்து நாட்டின் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பத்தேவியா (Batavia) என்று அழைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சகார்த்தாJakarta, நாடு ...

புராதன மீன்பிடிக் கிராமமாக இருந்து வளர்ச்சி பெற்ற இந்த நகரம் இன்று உலகின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

பண்டைய இசுலாமிய சுலுத்தான் ஒருவர் இந்த நகரை வெற்றி கொண்டபோது வெற்றியின் நகரம் எனப் பொருள்படும் சயகர்த்தா எனப் பெயரிட்டிருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே இதன் பெயர் சகார்த்தா ஆகியிருக்கிறது.

இந்நகரின் இன்றைய மக்கள் தொகை கிட்டத்தட்ட 35 மில்லியன் எனவும் தினசரி வேலைகளுக்காக வெளியிடங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 16 மில்லியனுக்கு மேல் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

பொது

இது உலகின் மிகப் பெரும் நகரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த போதிலும்; எங்கு சென்றாலும் மா, வாழை, ரம்புத்தான் போன்ற பழ மரங்களையும் வெவ்வேறு விதமான அழகிய மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் காண முடியும். ஜகார்த்தா மாநகரம் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் என்று அறியப் படுகின்றது.

இந்நகரில் பயணிக்கும்போது இது உலகின் மிக அழகிய நகரங்களுள் ஒன்றெனும் உண்மை அனைவருக்கும் புலனாகும். எனினும், உலகின் மற்றப் பெருநகரங்களைப் போன்று பாதாளத் தொடருந்துச் சேவைகள் இங்கு இல்லை. அதனால் வீதிப் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே காணப்படுகிறது.

ஐந்து மேயர்கள்

ஜகார்த்தா மாநகரம் இந்தோனேசியாவின் (ஜகார்த்தா, யோக்யகர்த்தா மற்றும் ஆச்சே ஆகிய) மூன்று சிறப்பு நிருவாகப் பிராந்தியங்களில் ஒன்றாகும். அதன் மிகப் பெரும் நகரமும் ஆகும். இந்த நகர நிருவாகத்தை ஐந்து பிரதான பிரிவுகளாகப் பிரித்து இருப்பதால் இந்த நகருக்கென ஐந்து மேயர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்தோனேசியாவின் பல்வேறு மொழிகளையும் பேசக்கூடிய மக்கள் இங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஜகார்த்தா நகரில் எங்கு சென்றாலும் இந்தோனேசிய மொழியிலேயே உரையாடுகிறார்கள். பண்டைய ஜகார்த்தாவாசிகள் பேசிய மொழியான பத்தாவிய மொழியைப் பேசுவோரும், சாவகத் தீவின் மேற்குப் பகுதியில் அதிகமாகப் பேசப்படும்

சுண்டா மொழியைப் பேசுவோரும், இந்தோனேசிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியினரின் தாய்மொழியாகிய சாவக மொழியைப் பேசுவோரும் இங்கு அதிகமாகவே காணப் படுகின்றனர்.

இந்தோனேசியத் தமிழர்கள்

இங்கு அரச அலுவல்கள் அனைத்தும் இந்தோனேசிய மொழியில் மாத்திரமே நடைபெறுவதால் ஆங்கிலம் அல்லது வேறு மேற்கத்திய மொழிகளைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே காணப் படுகின்றனர். இந்தோனேசியத் தமிழர்களிலும் கணிசமான தொகையினர் இங்கு வாழ்கின்றனர்.

முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்த போதிலும், இந்நகரில் பொதுவாக அனைத்து மதங்களையும் பேணும் மக்களும் வாழ்கின்றனர். மற்ற மதங்கள் மீதான சகிப்புத்தன்மை இங்கு மிக அதிகம். மேலும், மேற்கத்தியக் கலாசாரத்தின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஜகார்த்தா மாநகரில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வு கூடங்களும் காணப்படுகின்றன.

சுகர்னோ-ஹத்தா பன்னாட்டு விமான நிலையம்

ஜகார்த்தா மாநகரின் புறநகர்ப் பகுதியான செங்காரெங் எனுமிடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையம் சுகர்னோ-ஹத்தா பன்னாட்டு விமான நிலையம் என அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சிறந்த தலைவர்களெனக் கருதப்படும் முன்னாள் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரின் நினைவாகவே பெயரிடப்பட்டு இருக்கிறது.

பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கு என முன்னர் பயன்படுத்தப் பட்டுவந்த ஹாலிம் பெர்தானா குசுமா விமான நிலையம் இப்போது இந்தோனேசியாவின் விமானப் படையினால் பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

பெயர்கள் மற்றும் சொற்பிறப்பியல்

ஜகார்த்தா பல குடியேற்றங்களின் பெயருடன் மாற்றம் கண்டுள்ளது:

  • சுந்தா கெலாபா - Sunda Kelapa (397-1527)
  • ஜெயகார்த்தா - Jayakarta (1527–1619)
  • பத்தேவியா - Batavia (1619–1942)
  • ஜாகார்த்தா - Djakarta (1942–1972)
  • ஜகார்த்தா - Jakarta (1972-தற்போது)

இதன் தற்போதைய பெயர் ஜெயகார்த்தா (Jayakarta) என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. இந்த வார்த்தையின் தோற்றங்கள் பழைய ஜாவானியா மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் பொருந்துகின்றன. "ஜெயகார்த்தா" "வெற்றிகரமான செயலாக", "முழுமையான செயல்", அல்லது "முழுமையான வெற்றி" என்று மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

Remove ads

மக்கள்தொகை

1950 முதல், ஜாவா மற்றும் பிற இந்தோனேசிய தீவுகளின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜகார்த்தாவுக்கு மக்கள் படையெடுத்தனர். மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு ஜகார்த்தாவில் வழங்கப்படும் என வெள்ளமாக மக்கள் குவிந்தனர்.

1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரின் மக்கள்தொகையில் வெறும் 51% மக்கள் மட்டுமே உண்மையில் ஜகார்த்தாவில் பிறந்தவர்கள். 1961 மற்றும் 1980 க்கு இடையில், ஜகார்த்தா மக்கள்தொகை இரு மடங்காக உயர்ந்தது மற்றும் 1980-1990 காலப்பகுதியில் நகர மக்கள் தொகை ஆண்டுக்கு 3.7% ஆக அதிகரித்தது.

2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜகார்த்தா மக்கள்தொகையாக 9.58 மில்லியன் மக்களைக் கணக்கிட்டது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. ஜகார்த்தாவின் பரப்பளவு 664 கி.மீ. 2 ஆகும், இந்நகரின் மக்கள் அடர்த்தி 15,174 மக்கள்/ 1 சதுர கி.மீ. ஆகும். இதனால் இந்த நகர் உலகின் ஒன்பதாவது அடர்த்தி மிகுந்த நகரமாகப் பெயர் பெற்று உள்ளது.

மதங்கள்

ஜகார்த்தா மக்கள் தொகையில் 85.36% முஸ்லிம்கள், 7.53% புராட்டஸ்டன்டு, 3.30% பெளத்தர்கள், 3.15% ரோமன் கத்தோலிக்கர்கள், 0.21% இந்து, மற்றும் 0.06% கன்புஷியனிஸ்டு ஆகியோர். ஜகார்த்தா மக்கள் பெரும்பான்மையானவர்கள் சன்னி முஸ்லீம்கள்.

இந்தோனேசியா உலாமா கவுன்சில், முகம்மதியா, ஜரிக்கிங்கன் இஸ்லாம் லிபரல் மற்றும் முன்னணி பெம்பெலா இஸ்லாம் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையகம் ஜகார்த்தாவில் பல உள்ளன.

விளையாட்டு

ஜகார்த்தாவில் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் இங்கே தான் நடந்தன. ஜகார்த்தா மாநகர் 1979, 1987, 1997, மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.

மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள கெலொரா பங் கர்னோ ஸ்டேடியம் (Gelora Bung Karno Stadium), மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் 2007 AFC ஆசிய கோப்பை குழு நிலை (group stage), கால் இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்தியது.[3]

ஜகார்த்தாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் 88,083 இடங்களைக் கொண்டிருக்கும், கெலோரா பங் கர்னோ அரங்கம் ஆகும். ஜகார்த்தா மராத்தான் பந்தயம் "இந்தோனேசியாவின் மிகப்பெரிய ஓடுதல் நிகழ்வு" என்று கூறப்படுகிறது.[4]

இது பன்னாட்டு மராத்தான் மற்றும் தொலைவு ஓட்டப்பந்தய சங்கம் (AIMS) மற்றும் பன்னாட்டு தடகள கூட்டமைப்பு சங்கத்தால் (IAAF) அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 2015-ஆம் ஆண்டின் மராத்தான் போட்டியில், 53 நாடுகளில் இருந்து 15,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.[5]

Remove ads

ஜகார்த்தாவில் உள்ள இடங்கள்

கிழக்கு

  1. சாகுங் (Cakung)
  2. சிபாயுங் (Cipayung)
  3. சிராசஸ் (Ciracas)
  4. துரேன் சவித் (Duren Sawit)
  5. ஜதினக்கார (Jatinegara)
  6. கிராமட் ஜதி (Kramat Jati)
  7. மகசர் (Makasar)
  8. மத்ராமன் (Matraman)
  9. பசார் ராப்போ (Pasar Rebo)
  10. புலொ காடுங் (Pulo Gadung)

மேற்கு

  1. சிங்கரேங் (Cengkareng)
  2. கிரோக்கோல் பதாம்புரன் (Grogol Petamburan)
  3. கலிடாராஸ் (Kalideres)
  4. கீபோன் ஜருக் (Kebon Jeruk)
  5. கெம்பாங்கான் (Kembangan)
  6. பால்மேரா (Palmerah)
  7. தாமான் சாரி (Taman Sari)
  8. தம்போரா (Tambora)

மத்திய

  1. செம்பாக புத்தீ (Cempaka Putih)
  2. காம்பீர் (Gambir)
  3. ஜொகார் பாரு (Johar Baru)
  4. கெமாயோரன் (Kemayoran)
  5. மெண்டெங் (Menteng)
  6. சாவா பிசர் (Sawah Besar)
  7. செணேன் (Senen)
  8. தானா அபங் (Tanah Abang)

வடக்கு

  1. சிலிஞ்சிங் (Cilincing)
  2. கிலாப்பா காடிங் (Kelapa Gading)
  3. கொஜா (Koja)
  4. படெமாஙான் (Pademangan)
  5. பெஞ்சரீஙான் (Penjaringan)
  6. தாஞ்சூங் ப்ரியுக் (Tanjung Priok)

தெற்கு

  1. சிலாண்டாக் (Cilandak)
  2. ஜக்ககார்சா (Jagakarsa)
  3. கெபயோரான் பாரு (Kebayoran Baru)
  4. கெபயோரான் லாமா (Kebayoran Lama)
  5. மம்பாங் ப்ரபாதன் (Mampang Prapatan)
  6. பாஞ்சொரன் (Pancoran)
  7. பசார் மிங்கு (Pasar Minggu)
  8. பெசாங்கிரக்கான் (Pesanggrahan)
  9. செடிய பூடி (Setiabudi)
  10. தெபெட் (Tebet)
Remove ads

ஜகார்த்தாவின் சகோதரி நகரங்கள்

இது ஜகார்த்தாவின் சகோதரி நகரங்களின் பட்டியலாகும்:

ஆப்ரிக்கா

கெய்ரோ, எகிப்து கசாபிளாங்கா, மொராக்கோ

ஆசியா

இஸ்லாமாபாத், பாக்கிஸ்தான் ஜெத்தா, சவுதி அரேபியா இஸ்தான்புல், துருக்கி பெய்ஜிங், சீனா ஷாங்காய், சீனா டோக்கியோ, ஜப்பான் பியோங்யாங், வட கொரியா சியோல், தென் கொரியா ஹனோய், வியட்நாம் பாங்காக், தாய்லாந்து

ஐரோப்பா

ஏதன்ஸ், கிரீஸ் பாரிஸ், பிரான்ஸ் பெர்லின், ஜெர்மனி புடாபெஸ்ட், ஹங்கேரி ராட்டர்டாம், நெதர்லாந்து லண்டன், யுனைட்டட் கிங்டம் மாஸ்கோ, ரஷ்யா

அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ்

ஓசியானியா

சிட்னி, ஆஸ்திரேலியா

Remove ads

புவியியல்

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Halim Perdanakusuma Airport, Jakarta, Indonesia (temperature: 1924–1994, precipitation: 1931–1994), மாதம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads