சங்ககிரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்ககிரி (Sangagiri) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் உள்ள நகராட்சியாகும். மேலும் இவ்வூர் சங்ககிரி வட்டம் மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை சங்கு போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
Remove ads
அமைவிடம்
சேலம் - ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 36 கி.மீ.; மேற்கில் ஈரோடு 22 கி.மீ.; வடக்கில் எடப்பாடி 15 கி.மீ. மற்றும் தெற்கில் திருச்செங்கோடு 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி தொடருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகராட்சி அமைப்பு
19.2 கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 79 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி சங்ககிரி சட்டமன்றத் தொகுதி[4] மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[5][6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,122 வீடுகளும், 29,467 மக்கள்தொகையும், கொண்டது.[7]
பொருளாதாரம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

வரலாறு
சங்ககிரி மலை கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.
இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் அசதிக்கோவை என்னும் நூலைப் பாடியுள்ளார்.[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads