சசிகாந்த் செந்தில்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சசிகாந்த் செந்தில் (sasikanth senthil, 28 மார்ச், 1979) என்பவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் இ.ஆ.ப அதிகாரியும், இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இவர் 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
Remove ads
வாழ்க்கை
சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் 2009இல் கருநாடகத்தின் இ.ஆ.ப அதிகாரியாக தன் பணியைத் தொடங்கினார். ராய்ச்சூர், சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அதன் பின்னர் கருநாடக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி மீ்ண்டும் வெற்றிபெற்றதைக் கண்டு வருந்தி தன் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
இதன்பிறகு மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இவருக்கு சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. 2023 கருநாடக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரசு செண்டரல் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] இதனையடுத்து கருநாடக மாநில ப.ஜ.க ஆட்சியின் ஊழல் போன்ற முக்கியச் சிக்கல்களை மக்களிடம் புதிய யுக்தியில் கொண்டு சென்று கவனத்தை ஈர்த்தார்.[3] இவ்வாறு திறப்பட செயல்பட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய முக்கியப் பங்காற்றினார்.[4]
இவருக்கு 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தது. அந்தத் தேர்தலில் சசிகாந்த் செந்தில் மொத்தம் 7,96,953 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்துவந்த பா.ஜ.க வேட்பாளரைவிட 5,72 இலட்சம் வாக்குகளைக் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads