சதாசிவ மூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேலதிகத் தகவல்கள் இயல்பு, ஈசானம் ...
![]() (10ஆம் நூற்.) சதாசிவம், தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவன் வடிவமாகும்.[1] தூயவெண்ணிறத்துடன், ஐந்து திருமுகங்களும், பத்துக் கரங்களும், பதினைந்து திருக்கண்களும் கொண்டு, பதினாறு வயது இளைஞனாகக் காட்சியருளும் சதாசிவனைத் தியானிக்குமாறு, ஆகமங்கள் கூறுகின்றன. சிவத்திருக்கோலம்உத்தர காமிகத்தின் படி, வலக்கையில் சூலமும், மழுவும், கட்வாங்கமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டும், இடக்கையில் நாகம், மதுலிங்கப்பழம், நீலோற்பலம், உடுக்கை, மணிமாலை, கொண்டும் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி ஈசானம், தற்புருடம், வாமம், அகோரம், சத்தியோசாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். இவரது தேவியாக அமர்ந்திருக்கும் சக்திக்கு, மனோன்மணி என்று பெயர். சதாசிவ வடிவமானது, அறுபத்துநான்கு சிவத்திருக்கோலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.சிவலிங்கம் சதாசிவனின் வடிவம் என்று சொல்லப்படுகின்றது. இலிங்கத்திருவுருவை வழிபடினும், சதாசிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். சதாசிவனின் திருமுகங்கள்ஐந்தொழிலை ஆற்றுகின்ற பரம்பொருளின் அதியுச்ச வடிவமாகக் கருதப்படும், சதாசிவமே, ஈசனின் திருப்பெருவடிவமாகக் கருதப்படுகின்றார். இம்மூர்த்தி, தன் ஐந்து திருமுகங்கள் மூலமே ஐந்தொழிலை நிகழ்த்துவதாக ஆகமநூல்கள் கூறுகின்றன. அவற்றின் சுருக்கம் வருமாறு:
மேலும் காண்கமேற்கோள்கள் |
மூடு
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads