சத்தியவாடி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்யவாடி கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில், விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் 8-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒர் கிராமம் ஆகும். கிட்டத்தட்ட 850 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் 4,500-இற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால் மக்களின் முக்கியத்தொழில் விவசாயம் ஆகும். இவ்வூரின் அருகிலேயே அம்பிகா சர்க்கரை ஆலை (முன்பு அருணா சர்க்கரை ஆலை என வழங்கப்பட்டது) உள்ளதால் கரும்பு பெருமளவில் பயிரிடப்படுகிறது. நீர்வளம் நன்றாக உள்ளதால் கரும்புக்கு இணையாக நெல்லும் பயிரிடப்படுகிறது. உளுந்து, நிலக்கடலை, கம்பு, எள், சோளம், துவரை, மரவள்ளிகிழங்கு, வெள்ளரி இன்ன பிற காய்கறிகள் போன்றவையும் அவ்வப்போது ஆங்காங்கே சிறிய அளவிலும், ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. ஊருக்கு வடமேற்கே பெரிய ஏரி உள்ளது; ஊருக்கு தெற்கே வெள்ளாறு ஓடுகிறது, மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் வருவதுண்டு. ஆகையால் நிலத்தடிநீர் எப்போதும் வளமாக இருக்கும். பெருமளவு நீர்ப்பாசனம் மின்மோட்டார் மூலமே நடைபெறுகிறது.

விரைவான உண்மைகள் மொழிகள் ...

இவ்வூரில் எட்டாவதுவரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் உள்ள கிராமங்களான நந்தப்பாடி, ஆலந்துரைப்பட்டு ஆகியவற்றுக்கும் சேர்த்து ஒரு அஞ்சல் அலுவலகமும் உள்ளது. மேலும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

Remove ads

சுற்றியுள்ள ஊர்கள்

கோயில்கள்

  1. விநாயகர் கோயில்
  2. சிவன் கோயில் - ஆலந்துரைஈஸ்வரர்
  3. மாரியம்மன் கோயில்
  4. திரௌபதி அம்மன் கோயில்
  5. ஐயப்பன் கோயில்
  6. ஐயனார் கோயில்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads