சந்திராவரம் பௌத்தத் தலம்

From Wikipedia, the free encyclopedia

சந்திராவரம் பௌத்தத் தலம்map
Remove ads

சந்திராவரம் பௌத்தத் தலம் (Chandavaram Buddhist site) இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின், பிரகாசம் மாவட்டத்தில் சந்திராவரம் கிராமத்தில் உள்ளது. இப்பௌத்தத் தலம் கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.[2][3] குண்டலகம்மா ஆற்றின் கரையில், தோனகொண்டா இரயில் நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் சந்திராவரம் பௌத்தத் தொல்லியல் களம் உள்ளது.[4]

விரைவான உண்மைகள் சந்திராவரம் பௌத்தத் தலம், மாற்றுப் பெயர் ...
Thumb
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

கிமு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மையப்பகுதிகளை சாதவாகனர்கள் ஆட்சி செய்த காலத்தில் நிறுவப்பட்ட சந்திராவரம் பௌத்த தொல்லியல் களத்தை, முனைவர். வெலூரி வெங்கட கிருஷ்ண சாஸ்திரி என்பவர் 1964ல் கண்டுபிடித்தார்.[1][2][5]

Remove ads

கட்டுமான அமைப்பு

சந்திராவரம் பௌத்த தொல்லியல் களத்தில், மலைக்குன்றின் உச்சியில் இரண்டு நிலைகளுடன் கூடிய தூபிகளுடன் செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டுள்ளது.[1][3][6] பௌத்தப் பிரிவான ஈனயானம் பௌத்த கட்டிடக் கலை நயத்தில் வடிக்கப்பட்ட மகாதூபி 120 அடி சுற்றளவும், 30 அடி உயரமும் கொண்டுள்ளது. மகாதூபியில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திராவரம் பௌத்த தொல்லியல் களம், பல பௌத்த விகாரைகளும், பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் கொண்டுள்ளது.

மகாதூபியில், 1.6 மீட்டர் உயரமும், 60 செண்டி மீட்டர் அகலம் கொண்ட சைத்தியமும் உள்ளது.[3][5]

மகாதூபி சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. அதில் புத்தரின் பாதங்கள், போதி மரம், புத்த ஜாதக கதைகள் முதலியன பொறிக்கப்பட்டுள்ளது. 1964 முதல் நான்கு முறை இவ்விடத்தை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. போது கீழ் கண்டவைகள் கண்டெடுக்கப்பட்டது.[1]

Remove ads

அமைவிடம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads