சந்தேசுவரர் தாக்கூர்
மைதிலி மொழி எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தேசுவரர் தாக்கூர் (Caṇḍeśvara Ṭhakkura) 14 ஆம் நூற்றாண்டில் மைதிலி மொழி அரசியல் கோட்பாட்டாளரும், போர்வீரரும் ஆவார். இவர் இந்தியாவின் இன்றைய வடக்கு பீகார் மற்றும் தெற்கு நேபாளத்தின் சில பகுதிகளில் இருந்த மிதிலையின் கர்னாட்டு வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த அரிசிம்மதேவனின் அரசவையில் அமைதி மற்றும் போருக்கான அமைச்சராகவும், தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். [1] இவரது குடும்பம் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பிஸ்ஃபி கிராமத்தைச் சேர்ந்தது. [2]
Remove ads
குடும்பம்
கர்னாட்டுகளின் அரசவையில் பணியாற்றிய கற்றறிந்த அறிஞர்களான மைதிலி பிராமணர்களின் குடும்பத்தில் சந்தேசுவரர் பிறந்தார். [3] இவரது காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு உருவான ஆயின்வார் வம்சத்தின் அரசவையில் கவிஞராக பணிபுரிந்த வித்யாபதியின் தாத்தா ஜெயதத்தனின் உறவினர் ஆவார். கர்னாட்டு வம்சத்தின் அரசவையில் "போர் மற்றும் அமைதிக்கான மந்திரி" என்று விவரிக்கப்பட்ட மற்றொரு அறிஞரான தேவாதித்ய தாக்கூரின் பேரனும் ஆவார்.[4]
பொது ஊழி 1310 இல் அரிசிம்மதேவனின் அமைதி மற்றும் போருக்கான மந்திரியாக இருந்தார். [5]
Remove ads
இராணுவ வாழ்க்கை
அக்காலத்திய முதன்மை ஆதாரங்கள் இவரை ஒரு சிறந்த இராஜதந்திரி என்றும் வெற்றிகரமான மந்திரியாகவும், தளபதியாகவும் விவரிக்கின்றன. இவர் மிலேச்சாக்களுக்கு எதிரான போர்களில் பங்கேற்றார் (ஒருவேளை முஸ்லிம் படையெடுப்புகளாக இருக்கலாம்)
இவர் சில துக்ளக் தளபதிகளை தோற்கடித்திருக்கலாம். [6] மேலும் நேபாளத்திற்கு ஒரு வெற்றிகரமான இராணுவப் பயணத்தை வழிநடத்தினார். அங்கு இவர் 1314 இல் பாக்மதி ஆற்றின் கரையில் தனக்குச் சமமான எடையில் தங்கத்தை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.. [7]
சந்தேசுவரரின் தலைமையின் கீழ், மன்னன் அரிசிம்மதேவனின் ஆதரவுடன், மிதிலையின் கர்னாட்டுகள் 1314 இல் நேபாளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். கர்னாட்டுகள் பக்தபூர் நகரத்தை தங்கள் மையமாக வைத்து நகரத்தை கொள்ளையடித்தனர். இதற்குப் பிறகு, அவர்கள் லலித்பூர் பகுதியை குறிவைத்தனர். [8]
Remove ads
இலக்கியப் படைப்புகள்
அரசை ஒழுங்கமைப்பது பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையான ராஜநிதிரத்னாகரம் இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும். இது தவிர, மற்ற கருப்பொருள்களுடன் சட்டம் தொடர்பான சிக்கல்களைக் கையாளும் கிருத்யரத்னாகரம், தனரத்னாகரம், விவாகரத்னாகரம், சூத்திரத்னாகரம், புஜரத்னாகரம், விவாதரத்னாகரம், மற்றும் கிருஹஸ்தரத்னாகரம் என்ற ஏழு புத்தகங்களின் தொகுப்பையும் இவர் எழுதினார். இந்த நூல்கள் அனைத்தும் சப்தரத்னாகரம் என்று குறிப்பிடப்படுகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads