சரித் அசலங்க
இலங்கையின் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரித் அசலங்க (Charith Asalanka, பிறப்பு: 29 சூன் 1997) இலங்கையின் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் தேசிய அணிக்காக மூன்று வகையான துடுப்பாட்டங்களிலும் விளையாடுகிறார், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் தேசிய அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். ஒரு இடது கை துடுப்பாட்டக்காரரான அசலங்க 2021 சூனில் இலங்கைக்காக பன்னாட்டு அரங்கில் அறிமுகமானார்.
Remove ads
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
சூன் 2021 இல், இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியில் அசலங்க இடம்பிடித்தார்.[1][2] 2021 சூன் 29 அன்று இலங்கைக்காக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[3] 2021 சூலையில், இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்றார்.[4] 2021 சூலை 19 அன்று, அசலங்கா இந்தியாவிற்கு எதிராக தனது முதல் பன்னாட்டு ஒருநாள் அரைசதத்தை அடித்தார்.[5] தனது இ20ப அறிமுகத்தை 2021 சூலை 25 அன்று, இலங்கைக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads