ஆசியக் கிண்ணம் 2022
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியக் கிண்ணம் 2022 (2022 Asia Cup) என்பது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் போட்டியின் 15வது பதிப்பாகும். இத்தொடர் 2022 ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பன்னாட்டு இருபது20 (இ20ப) பன்னாட்டுப் போட்டிகளாக விளையாடப்பட்டது.[1][2] தொடக்கத்தில் 2020 செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனாலும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.[3] பின்னர் 2021 சூன் மாதத்தில் இலங்கையில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டு,[4] மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[5] 2022 போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்த பிறகு, பாக்கித்தான் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.[6] இருப்பினும், அக்டோபர் 2021 இல், ஆசியத் துடுப்பாட்ட அவை இலங்கை 2022 போட்டியை நடத்தும் என்று அறிவித்தது,[7] 2023 போட்டிகளை பாக்கித்தான் நடத்தும்.[8]
இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக போட்டியை நடத்தும் நிலையில் அந்நாடு இருக்காது என்று இலங்கை துடுப்பாட்ட வாரியம் 2022 சூலை 21 அன்று அறிவித்தது.[9][10] 2022 சூலை 27 அன்று, போட்டி அமீரகத்தில் விளையாடப்படும் என்று ஆசியத் துடுப்பாட்ட அவை உறுதிப்படுத்தியது,[11] இலங்கை போட்டியை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.[12] போட்டிக்கான விளயாட்டரங்குகள் 2022 ஆகத்து 2 அன்று அறிவிக்கப்பட்டது.[13]
நடப்பு வாகையாளரான இந்திய அணி,[14] இத்தொடரில் சூப்பர் நான்கு நிலையில் தொடரில் இருந்து வெளியேறியது.[15] இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தானை 23 ஓட்டங்களால் வென்று, ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.[16]
Remove ads
அணிகளும் தகுதிகளும்
தகுதிகாண் சுற்று 2022 ஆகத்து மாதத்தில் இடம்பெற்றது.[17] 2020 ஏசிசி மேற்குப் பிராந்திய இ20 தொடரில் இருந்து முன்னேறிய[18] ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் குவைத்திற்கும் இடையிலும், 2020 ஏசிசி கிழக்குப் பிராந்திய இ20 போட்டிகளில் இருந்து முன்னேறிய[19] சிங்கப்பூர், ஆங்காங் அணிகளுக்கிடையே தகுதிகாண் சுற்று இடம்பெற்றது. இதில், ஆங்காங் அணி முதலிடத்தில் வந்து ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தெரிவானது.[20]
Remove ads
விளையாடும் அணிகள்
Remove ads
அரங்குகள்
குழு நிலை
குழு ஏ
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நசீம் சா (பாக்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- விராட் கோலி (இந்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[27]
எ |
||
பாபர் அயாட் 41 (35) புவனேசுவர் குமார் 1/15 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
நிசாக்கத் கான் 8 (13) சதாப் கான் 4/8 (2.4 நிறைவுகள்) |
குழு பி
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ
எ |
||
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தில்சான் மதுசங்க, மதீசா பத்திராண (இல) இருவரும் தமது முதலாவது இ20ப போட்டிகளில் விளையாடினர்.
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சகீப் அல் அசன் (வங்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[30]
எ |
||
குசல் மெண்டிசு 60 (37) எபாடொட் ஒசைன் 3/51 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- எபாடொட் ஒசைன் (வங்), அசித்த பெர்னாண்டோ (இல) தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
Remove ads
சூப்பர் நான்கு
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ
இறுதிப் போட்டிக்குத் தெரிவு
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முகம்மது நாபி (ஆப்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[31]
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விராட் கோலி (இந்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்று, இந்தியாவுக்கான அதியுயர் இ20ப ஓட்டங்கள் (212) பெறப்பட்டது.[32] அத்துடன் கோலி பன்னாட்டு துடுப்பாட்டங்களில் தனது 71-ஆவது சதத்தைப் பெற்றார்.[33][34]
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரமோத் மதூசன் (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
Remove ads
இறுதிப் போட்டி
எ |
||
முகம்மது ரிசுவான் 55 (49) பிரமோது மதுசன் 4/34 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
Remove ads
புள்ளி விபரம்
அதிக ஓட்டங்கள்
அதிக இலக்குகள்
Remove ads
குறிப்புகள்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் போட்டிகளின் நடத்தும் உரிமையை இலங்கை துடுப்பாட்ட வாரியம் தக்கவைத்துக் கொண்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads