சர்கோதா மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சர்கோதா மாவட்டம்map
Remove ads

சர்கோதா மாவட்டம் (Sargodha District), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சர்கோதா ஆகும். 5,864 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில்[3]கோதுமை, அரிசி, கரும்பு மற்றும் எலுமிச்சை & ஆரஞ்சு அதிகம் பயிரிடப்படுகிறது.[4]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 43,34,448 ஆகும்.[5]இம்மாவட்டம் தேசிய அசெம்பிளிக்கு (தொகுதி எண்கள்: 82, 83, 84, 85 மற்றும் 86) 5 தொகுதிகளையும், பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 10 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் சர்கோதா மாவட்டம் ضلع سرگودھا, நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

சர்கோதா மாவட்டம் பல்வால், பெரா, கோட் மோமின், சகிவால், சர்கோதா, ஷாப்பூர் மற்றும் சிலான்வாலி என 7 வருவாய் வட்டங்களையும், 161 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,84,321 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 43,34,448 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.53 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 66.73%.[1][7]10 அகவைக்குட்பட்ட குழந்தைகள் 1,089,643 பேர் உள்ளனர்.[8]நகர்புற மக்கள் தொகை 16,09,587 (37.13%) மற்றும் கிராமப்புற மக்கள் தொகை 27,24,861 (62.87%) ஆக உள்ளது.[1]

சமயம்

  • இசுலாமியர்கள் - 98.03%[9]
  • கிறித்தவர்கள் - 1.86%
  • பிற சமயத்தவர்கள் - 0.11%

மொழிகள்

இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக பஞ்சாபி மொழி பேசுகின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads