சாகித் பெனாசீராபாத் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாகித் பெனாசீராபாத் கோட்டம் (Shaheed Benazirabad Division) (இதன் பழைய பெயர்:நவாப்ஷா கோட்டம்), பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் பெனசீர் பூட்டோ நினைவாக இக்கோட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நவாப்ஷா நகரம் ஆகும். [1][2]இக்கோட்டத்தின் நிர்வாகி ஆணையாளர் ஆவார்.
இக்கோட்டத்தில் 3 மாவட்டங்களும், 15 வருவாய் வட்டஙகளும் உள்ளது. இக்கோட்டம் சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 13 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 7 தொகுதிகளையும் கொண்டுள்ளது. இக்கோட்டத்தின் கிழக்கில் இந்தியா உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 59,28,917 (5.9 மில்லியன்). ஆகும். இக்கோட்டத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் 3,010,350 மற்றும்2,918,315 பெண்கள் உள்ளனர்.
மொழி
இக்கோட்டம் மக்கள் தொகையில் சிந்தி மொழியை 83.74% மக்களும், உருது மொழியை 6.49% மக்களும், பஞ்சாபி மொழியை 3.86% மக்களும், பலூச்சி மொழியை 1.37% மக்களும், பிராகுயி மொழியை 1.19% மக்களும், சராய்கி மொழியை 0.94% மக்களும், இந்த்கோ மொழியை 0.81% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.56% மக்களும் பேசுகின்றனர்.[3]
Remove ads
சமயம்
இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 98%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர். இந்து சமயம், கிறித்தவம் போன்ற சிறுபான்மை சமயங்களை 2%க்கும் குறைவான மக்களே பின்பற்றுகின்றனர்.
மாவட்டங்களின் பட்டியல்
வருவாய் வட்டங்கள்
Remove ads
சட்டமன்ற & நாடாளுமன்ற தொகுதிகள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads