ஷாஜகான்

5வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1628–1658) From Wikipedia, the free encyclopedia

ஷாஜகான்
Remove ads

சகாபுதீன் முகம்மது குர்ரம் (ஆங்கிலம்: Shahab-ud-Din Muhammad Khurram; 5 சனவரி 1592 – 22 சனவரி 1666) என்பவர் முகலாயப் பேரரசின் 5வது பேரரசர் ஆவார். இவர் தனது பட்டப் பெயரான முதலாம் ஷாஜகான் (ஆங்கிலம்: Shah Jahan I) என்ற பெயரால் பரவலாகவும், சிறப்பு வாய்ந்த ஷாஜஹான் (ஆங்கிலம்: Shah Jahan the Magnificent) என்றும் அறியப்படுகிறார். ஷாஜகான் என்ற பாரசீகப் பெயருக்கு உலகின் மன்னன் என்று பொருள். இவரது ஆட்சியின் கீழ் முகலாயர்கள் தங்களது கட்டடக்கலைச் சாதனைகள் மற்றும் கலாச்சாரப் பெருமைகளின் உச்சத்தை அடைந்தனர்.

விரைவான உண்மைகள் முதலாம் ஷாஜகான், முகலாயப் பேரரசின் 5ஆம் பேரரசர் ...

இவர் சகாங்கீரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். மேவாரின் இராசபுத்திரர்கள் மற்றும் தக்காணத்தின் லோடிக்களுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புகளில் ஷாஜகான் பங்கெடுத்தார். 1627ஆம் ஆண்டு அக்டோபரில் ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகு தனது தம்பி சகாரியார் மிர்சாவைத் தோற்கடித்த பிறகு, ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் பேரரசராகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொண்டார். சகாரியார் மிர்சாவுடன் சேர்த்து அரியணைக்கு உரிமை கோரிய எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஷாஜகான் மரண தண்டனை கொடுத்தார். இவர் செங்கோட்டை, ஷாஜகான் மசூதி மற்றும் தாஜ்மகால் ஆகிய பல்வேறு நினைவுச்சின்னங்களைக் கட்டினார். தாஜ் மகாலில் இவரது விருப்பத்துக்குரிய மனைவியான மும்தாசு மகால் அடக்கம் செய்யப்பட்டார். அயல் நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரையில், ஷாஜகான் தக்காண சுல்தானகங்களுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கைகள், போர்த்துக்கீசியர்களுடனான சண்டைகள் மற்றும் சபாவித்துகளுடனான போர்கள் ஆகியவற்றை நடத்தினார். அதே நேரத்தில் உதுமானியப் பேரரசுடன் நடைமுறையிலான உறவுகளைப் பேணினார். இவர் பல உள்ளூர்க் கிளர்ச்சிகளையும் ஒடுக்கினார். அழிவை ஏற்படுத்தியத் தக்காணப் பஞ்சத்தை எதிர்கொண்டார்.

1657ஆம் ஆண்டு செப்டம்பரில் ஷாஜகானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர் தனது மூத்தமகன் தாரா சிக்கோவைத் தனது வாரிசாக நியமித்தார். இந்த நியமிப்பு இவரது மூன்று மகன்களுக்கிடையே வாரிசுப் பிரச்சனைக்கு இட்டுச் சென்றது. இப்பிரச்சனையிலிருந்து ஷாஜகானின் மூன்றாவது மகன் ஔரங்கசீப் வெற்றியாளராக உருவானர். முகலாயப் பேரரசின் 6வது பேரரசர் ஆனார். 1658ஆம் ஆண்டு சூலையில் ஷாஜகான் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தபோது, ஔரங்கசீப் தனது தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறைப்படுத்தினர். 1666ஆம் ஆண்டு சனவரியில் இறக்கும் வரை ஷாஜகான் சிறையிலேயே இருந்தார்.[7] இறப்பிற்குப் பிறகு தாஜ்மகாலில் இவரது மனைவி மும்தாசுக்கு அருகில் இவர் புதைக்கப்பட்டார். அக்பரால் தொடங்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகளிலிருந்து விலகியதற்காக இவரது ஆட்சி அறியப்படுகிறது. ஷாஜகானின் ஆட்சியின்போது இஸ்லாமியப் புத்துயிர் இயக்கங்களான நக்‌ஷபந்திய்யா போன்றவை முகலாயக் கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.[8]

Remove ads

தொடக்க வாழ்க்கை

பிறப்பும், பின்புலமும்

Thumb
எடைக்கு எடை தானம் வழங்க இளவரசன் குர்ரமை எடை போடும் சகாங்கீர். ஓவியர் மனோகர் தாசு. அண்.1610-1615.

இவர் 5 சனவரி 1592-இல் தற்கால பாக்கித்தானின் லாகூரில் இளவரசன் சலீமின் (இவர் மன்னனான பிறகு பிற்காலத்தில் 'சகாங்கீர்' என்று அறியப்பட்டார்) ஒன்பதாவது குழந்தை மற்றும் மூன்றாவது மகனாக அவரது முதன்மையான மனைவி சகத் கோசைனுக்குப் பிறந்தார்.[9][10] குர்ரம் (பாரசீகம்: 'மகிழ்ச்சியானவன்') என்ற பெயரானது இவரது தாத்தா பேரரசர் அக்பரால் தேர்ந்தேடுக்கப்பட்ட பெயர் ஆகும். அக்பருக்கும், இவருக்கும் இடையில் நெருக்கமான உறவுமுறை இருந்தது.[10] அக்பர் குர்ரமிடம் அதிக பாசத்துடன் இருந்ததாகவும், "இக்குழந்தையையும், உன் மற்ற மகன்களையும் ஒப்பிட இயலாது. நான் இக்குழந்தையை என் உண்மையான மகனாகக் கருதுகிறேன்" என்று அடிக்கடி கூறியதாகவும் ஜஹாங்கீர் குறிப்பிட்டுள்ளார்.[11]

குர்ரம் பிறந்த போது இவர் வெற்றிகரமானவராக உருவாவார் என்று கருதிய அக்பர் சலீமின் வீட்டில் வளராமல் இந்த இளவரசன் தன் வீட்டில் வளர வேண்டுமென அறிவுறுத்தினார். இவ்வாறாக இவரை வளர்க்கும் பொறுப்பானது ருக்கையா சுல்தான் பேகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குர்ரமை வளர்க்கும் முதன்மையான பொறுப்பை ருக்கையா ஏற்றார்.[12] குர்ரமை அவர் பாசத்துடன் வளர்த்தார் என்று குறிப்பிடப்படுகிறது. சகாங்கீர் தன் சுயசரிதையில் "அக்குழந்தை ருக்கையா பேகத்தின் சொந்த மகனாக இருந்தால் எவ்வளவு அன்பு செலுத்துவாரோ அதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக குர்ரம் மீது ருக்கையா அன்பு செலுத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.[13]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads