சபாவித்து வம்சம்

From Wikipedia, the free encyclopedia

சபாவித்து வம்சம்
Remove ads

சபாவித்து வம்சம் (Safavid dynasty) நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாம் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.[6]

விரைவான உண்மைகள் சபாவித்து வம்சம்دودمان صفویDudmān e Safavi, நிலை ...

சபாவித்து பேரரசு போர்க்களங்களில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால், இதனை வெடிமருந்து பேரரசு என்றும் அழைப்பர்.[7]

சபாவித்து வம்சத்தின் ஆட்சி இரானிய அஜர்பைசான் பிரதேசத்தின் ஆர்டபில் நகரத்தில் முதலாம் ஷா இசுமாயில் (1501–24) என்பவரால் நிறுவப்பட்டது.

சபாவித்து வம்சத்தினர், இசுலாமிய சூபி - குர்திஷ் கலப்பினத்தவர் ஆவார். [8]சபாவித்து வம்சத்தினர் அசர்பைஜானியர்களுடனும், [9] ஜார்ஜியா நாட்டு மக்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். [10]

சபாவித்து வம்சத்தினர் 1501 முதல் 1722 முடிய தற்கால ஈரான், ஈராக், அசர்பைஜான், பாகாரேயின், ஆர்மீனியா, ஜார்ஜியா, குவைத், சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் பகுதிகளை ஆண்டனர்.

1736-இல் சபாவித்து பேரரசு சிதறுண்டாலும், ஈரானை சியா இசுலாம் பிரிவுக்கு மாற்றியதுடன், அனதோலியா, காக்கேசியா மற்றும் ஈராக்கிலும் சியா இசுலாம் பரவியது.

Remove ads

சபாவித்து வம்ச ஆட்சியாளர்கள்

  • முதலாம் இஸ்மாயில் 15011524
  • முதலாம் தமாஸ்ப் 15241576
  • இரண்டாம் இஸ்மாயில் 15761578
  • முகம்மது கொடபண்டா 15781587
  • முதலாம் அப்பாஸ் 15871629
  • சஃபி 16291642
  • இரண்டாம் சஃபி 16421666
  • முதலாம் சுலைமான் 16661694
  • சுல்தான் முதலாம் உசைன் 16941722
  • இரண்டாம் தமாஸ்ப் 17221732
  • மூன்றாம் அப்பாஸ் 17321736

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads