சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள்

From Wikipedia, the free encyclopedia

சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள்
Remove ads

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஒலிம்பிக் போட்டியாளர்கள் ( Independent Olympians at the Olympic Games) அல்லது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் என்போர் அரசியல் சூழல், பன்னாட்டுத் தடைகள் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் இடைநீக்கம் மற்றும் இரக்க உணர்வு என்ற பல காரணங்களுக்காகத் தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சாராது தனித்துப் போட்டியிடும் மெய்வல்லுநர்கள் ஆவர். கிழக்குத் திமோர், தெற்கு சூடான், குராசோ நாடுகளிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதான புவியரசியல் மாற்றங்களினாலும் செர்பிய மொண்டெனேகுரோவிலிருந்து (தற்போதைய கொசோவோ, மொண்டெனேகுரோ மற்றும் செர்பியா) பன்னாட்டு தடைகள் காரணமாகவும் இந்தியா, குவைத்தின் தேசிய ஒலிம்பிக் குழு இடைநீக்கம் செய்யப்பட்டமையாலும் சார்பற்ற ஒலிம்பியர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 1992இலும் 2016இலும் பதக்கங்கள் வென்றுள்ளனர்; இருமுறையும் சுடுதல் போட்டியில் வென்றனர்.

விரைவான உண்மைகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள், கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ...

இந்த சார்பற்ற ஒலிம்பியன்களுக்காக பெயரிடல் மற்றும் நாட்டுக் குறியீடு மரபுகள் சீர்மைப்படுத்தப்படவில்லை.

Remove ads

1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்

1992 ஒலிம்பிக் போட்டிகளின் போது செர்பியாவும் மொண்டெனேகுரோவும் மற்றும் மாக்கடோனியக் குடியரசு நாட்டு மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் பங்கேற்பாளர்களாகப் போட்டியிட்டனர். மாக்கடோனியாவில் அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழு உருவாகாத காரணத்தாலும் யூகோசுலாவியா கூட்டாட்சிக் குடியரசு (செர்பியா & மொண்டெனேகுரோ) ஐக்கிய நாடுகள் அவையால் தடை செய்யப்பட்டிருந்ததாலும் இந்நாட்டு விளையாட்டாளர்கள் இவ்வாறு ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். இருப்பினும் தனிநபர் யூகோசுலாவிய மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 58 மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்றனர். 16 மெய்வல்லுநர்கள் 1992ஆம் ஆண்டு கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கில் சார்பற்ற மாற்றுத் திறனாளர் போட்டியாளர்களாகப் பங்கேற்று எட்டு பதக்கங்களை வென்றனர்.

மேலதிகத் தகவல்கள் பதக்கம், பெயர் ...

ஒருங்கிணைந்த அணி

முன்னாள் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைந்த அணியாக ஒலிம்பிக் கொடியின் கீழ் 1992 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

Remove ads

2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

[2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், four athletes from கிழக்குத் திமோரிலிருந்து நான்கு மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாக போட்டியிட்டனர்; அந்நாடு விடுதலை பெற்று மாற்றத்தைத் தழுவும் நேரத்தில் போட்டிகள் வந்தமையால் இவ்வாறாயிற்று. 2000 கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு விளையாட்டாளர்கள் சார்பற்ற மாற்றுத் திறனாளர் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

மேற்சான்றுகள்

குறிப்புகள்
  1. மெய்வல்லுநரின் தேசியம் போட்டியின்போது பட்டியலிடப்படும்.

வெளி இணைப்புகள்

  • "Individual Olympic Athletes". Sports-Reference.com. Archived from the original on 2016-03-04. Retrieved 2016-08-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads