குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Winter Olympic Games) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பனிச்சூழலில் விளையாடப்படும் விளையாட்டுக்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு, பையாத்லான், பாப் இசுலெட், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, கர்லிங், பிகர் பனிச்சறுக்கு, பிரீ இசுடைல் பனிச்சறுக்கு, பனி வளைதடியாட்டம், லூஜ், நோர்டிக் கம்பைன்டு, குறுந்தொலைவு விரைவுப் பனிச்சறுக்கு, எலும்புக்கூடு இசுலெட், பனிச்சறுக்கு தாண்டுதல், பனிப்பலகை, விரைவுப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924ஆம் ஆண்டு பிரான்சின் சமோனிக்சில் நடத்தப்பட்டன. 1924 முதல் 1936 வரை எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போரினால் இந்த தொடர்ச்சி விடுபட்டது. மீண்டும் இப்போட்டிகள் 1948ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. கோடைக்கால ஒலிம்பிக் நடத்தும் நாடே குளிர்கால ஒலிம்பிக்கையும் நடத்த தெரிவு செய்யப்பட்டது. மேலும் இவை ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [1]1986இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு எடுத்த முடிவின்படி இவ்விரு நிகழ்வுகளும் தனித்தனி நான்காண்டு சுழற்சியில் நடத்தப்படுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் நடந்த பிறகு இரண்டாண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் நடத்தப்படுகிறது. இதன்படி 1992இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அடுத்த குளிர்கால ஒலிம்பிக் 1994இல் நடத்தப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
Remove ads
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல்

Remove ads
இதையும் காண்க
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads