சார்லசு சந்தியாகோ
மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்லசு சந்தியாகோ (Charles Anthony s/o R. Santiago; மலாய்: Charles Anthony Santiago; சீனம்: 查尔斯圣地亚哥) (பிறப்பு: 1 நவம்பர் 1960) என்பவர் பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party) சார்ந்த மலேசிய அரசியல்வாதி.
இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 8 மார்ச் 2008-இல் இருந்து 19 நவம்பர் 2022 வரையில், ஏறக்குறைய 14 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணி புரிந்துள்ளார்.
சீனர்கள் மிகுதியாக வாழும் கிள்ளான் தொகுதியில் நன்கு செல்வாக்கு பெற்றவராக அறியப்படுகிறார்.
Remove ads
பொது
இவர் நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2023 வரையில், பதவியில் இருந்து நீக்கப்படும் வரை தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (National Water Services Commission) (SPAN) தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[2][3]
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மனித உரிமைகள் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations Parliamentarians for Human Rights) தலைவராகவும் உள்ளார்.[4][5] அத்துடன் அவர் டிசம்பர் 2019 முதல் நவம்பர் 2022 வரை பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் தேர்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்டு; கிள்ளான் தொகுதியில் வெற்றிபெற்ற சார்லசு சந்தியாகோ மலேசிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்னர், சந்தியாகோ ஒரு பொருளாதார நிபுணராகப் பணியாற்றி வந்தார்.[6]
அவர் தனியார் நீர் மயமாக்கலுக்கு எதிரான கூட்டணி; மற்றும் மலேசியாவின் உலகமயமாக்கல் நிலைத்தன்மையை கண்காணிப்பது (Coalition Against Water Privatisation and Monitoring Sustainability of Globalisation Malaysia) போன்ற அரசு சாரா நிறுவனங்களுக்காகப் பணியாற்றினார்.
இரண்டாவது முறையாக 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலிலும்; மூன்றாவது முறையாக 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலிலும் கிள்ளான் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads