பாக்காத்தான் ராக்யாட்

From Wikipedia, the free encyclopedia

பாக்காத்தான் ராக்யாட்
Remove ads

பாக்காத்தான் ராக்யாட் (மலாய்: Pakatan Rakyat (PR); ஆங்கிலம்: People's Alliance; சீன மொழி: 人民聯盟); என்பது மலேசியாவில் ஒரு முறைசாரா மலேசிய அரசியல் கூட்டணி ஆகும். முன்னாள் மாற்று முன்னணி கூட்டணிக்குப் பதிலாக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் பாக்காத்தான் ராக்யாட் Pakatan Rakyat People's Alliance, சுருக்கக்குறி ...

இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை சேர்ந்து அமைத்த கூட்டணியாகும்.[1]

பின்னர், 2015-ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.

Remove ads

பொது

12-ஆவது மலேசிய பொது தேர்தல்லில் எதிர்கட்சிகள் மலேசியாவின் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றின. அவை கிளாந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகும். மற்றும் மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல்லின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையை இழக்கச் செய்தன.

அதன் பின்னர் எதிர்கட்சிகள் இணைந்து அந்த ஐந்து மாநிலங்களிலும் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தன. ஆனால் 2009 பிப்ரவரியில், மூன்று பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள், பாரிசான் நேசனல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சுயேச்சை உறுப்பினர்களாக மாறியதால் பாக்காத்தான் ராக்யாட் பேராக் மாநில நிர்வாகத்தை இழந்தது.

Remove ads

கொள்கைகள்

Thumb
மக்கள் நீதிக் கட்சி
Thumb
ஜனநாயக செயல் கட்சி
Thumb
மலேசிய இஸ்லாமிய கட்சி

பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:

  • வெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்
  • உயர் செயல்திறன், நிலையான, ​​மற்றும் சம பொருளாதாரம்
  • மத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை

பக்காத்தான் ராக்யாட் "ஆரஞ்சு புத்தகம்", மூலம் தமது கொள்கையை முன்னெடுத்து வைத்துள்ளது.

உறுப்பு கட்சிகள்

பக்காத்தான் ராக்யாட் மாநில அரசுகள்

பொது தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், மொத்த இடங்கள் ...

இந்தியப் பிரதிநிதிகள்

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads