சாலாக் திங்கி இஆர்எல் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலாக் திங்கி இஆர்எல் நிலையம் (ஆங்கிலம்: Salak Tinggi ERL Station; மலாய்: Stesen ERL Salak Tinggi) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங், சாலாக் திங்கி நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் 6 7 விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link) மூலமாக இயக்கப்படுகிறது.
பண்டார் சாலாக் திங்கி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கோலாலம்பூர் நகர மையத்திற்கு பயணிக்கும் பயணிகளுக்கு இந்த நிலையத்தில் உள்ள பல மாடி ஊர்திகள் நிறுத்துமிடம் சேவை செய்கின்றது.
விரைவுத் தொடருந்து இணைப்பு எனும் இஆர்எல் இணைப்பு புத்ராஜெயா & சைபர்ஜெயா எனும் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து மூலமாகவும் சேவை வழங்குகிறது [1]
Remove ads
கேஎல்ஐஏ போக்குவரத்து
கேஎல்ஐஏ போக்குவரத்து அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்யும் தொடருந்து சேவை ஆகும்.[2]
இது கோலாலம்பூரின் முக்கியத் தொடருந்து நிலையமான கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கேஎல்ஐஏ T1 (KLIA T1) மற்றும் கேஎல்ஐஏ T2 (KLIA T2) நிலையங்களுக்குச் சேவை செய்கிறது.
இந்த கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவை, கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துச் சேவையின் அதே வழித்தடங்களையும் பகிர்ந்து கொள்கின்றது. இந்த வழித்தடம்
விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link Sdn. Bhd) (ERL) மூலம் இயக்கப்படுகிறது.
Remove ads
சாலாக் திங்கி
சாலாக் திங்கி (Salak Tinggi) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்.
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கி.மீ.; மற்றும் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 53 கி.மீ.; சிரம்பான் மாநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது. வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், சாலாக் திங்கி நகரத்தை ‘வானூர்தி நிலைய நகரம்’ (Airport City) என்றும் அழைப்பது உண்டு.[3]
இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சிப்பாங் மாவட்டத்தின் நிர்வாக மையம் இந்த நகரில்தான் அமைக்கப்பட்டு உள்ளது.[4]
1970-ஆம் ஆண்டுகளில் சாலாக் திங்கி நகரம் ஓர் ஒதுக்குப் புறமான கிராமமாக இருந்தது. நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அது ஒரு காட்டுப் பகுதியில் இருந்ததால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.
Remove ads
பேருந்து சேவைகள்
காட்சியகம்
சாலாக் திங்கி இஆர்எல் நிலையம் (27 நவம்பர் 2021)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads