சாளுவ நரசிம்ம தேவ ராயன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாளுவ நரசிம்ம தேவ ராயன் (Saluva Narasimha Deva Raya)(கி.பி. 1485–1491) தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர் ஆவார். விஜயநகரப் பேரரசை ஆண்ட சாளுவ மரபின் முதல் அரசரும் இவரே.[1]

மேலதிகத் தகவல்கள் விசயநகரப் பேரரசு ...
Remove ads

தொடக்க காலம்

இவருடைய தந்தை சாளுவ குண்டா, சந்திரகிரியின் ஆளுநராக இருந்தார். விஜயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் காலத்தில் சாளுவ நரசிம்ம ராயனுக்கு இப்பதவி கிடைத்தது.

பேரரசனான சூழ்நிலை

பேரரசன் இரண்டாம் விருபாக்ச ராயனின் இறப்புக்குப் பின்னர் பிரௌத ராயன் விஜய நகரத்தின் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் பேரரசு பெருங் குழப்பங்களுக்கு உள்ளானது. உள்நாட்டுச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, பாமினி சுல்தான்களின் நெருக்குதல்கள் ஒரு புறமும், போத்துக்கீசர்களின் நடவடிக்கைகள் ஒருபுறமுமாக விஜயநகரப் பேரரசு ஆபத்துக்களை எதிர் நோக்கியது. புதிய பேரரசன்பிரௌத ராயன் இவற்றைச் சமாளிக்கக்கூடிய திறமை பெற்றவராக இல்லை. இந்நிலையில், சந்திரகிரியின் ஆளுநராக இருந்த சாளுவ நரசிம்ம ராயன், தனக்கு விசுவாசமாக இருந்த துளுவ நரச நாயக்கன் என்பவரை விஜயநகரத்துக்கு அனுப்பினார். விஜய நகரத்துள் புகுந்த நரச நாயக்கன் பிரௌத ராயனை ஆட்சியிலிருந்து அகற்றினார். இதனைத் தொடர்ந்து சாலுவ நரசிம்மனின் ஆட்சி விஜயநகரத்தில் தொடங்கியது.

Remove ads

வெற்றி, தோல்விகள்

பேரரசனாக ஆட்சியைத் தொடங்கிய சாளுவ நரசிம்மன், பேரரசுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைச் சமாளித்தது மட்டுமன்றி அதன் எல்லைகளை விரிவாக்குவதிலும் ஈடுபட்டார். எனினும், பல்வேறு பகுதித் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டவண்ணம் இருந்தன. 1491 அளவில் இவர் உதயகிரியை கஜபதி பேரரசர் கபிலேந்திரனிடம் இழந்தார். மைசூர் பகுதியைச் சேர்ந்த உம்மாத்தூர் தலைவர்கள், அடவல்லியைச் சேர்ந்த சாளுவர்கள், கர்காலாவின் சந்தாராக்கள், ஸ்ரீரங்கப்பட்டணம், கடப்பாவின் பேரணிப்பாட்டைச் சேர்ந்த சம்பேதர்கள் என்பவர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

1489 இல் உதயகிரி தொடர்பாக கஜபதியுடன் நிகழ்ந்த போர் சாளுவ நரசிம்மனுக்குப் பெரும் சீரழிவாக முடிந்தது. அப்போரில் இவர் பிடிபட்டு, உதயகிரிக் கோட்டையையும், சூழவுள்ள இடங்களையும் விட்டுக்கொடுத்த பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும், கர்நாடகத்தின் மங்களூர் நாட்டின் மேற்குத் துறைமுகங்களான, பாத்கல், ஹொன்னாவரா, பாகனூர் ஆகிவற்றைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். இவ்வெற்றிகள், அராபிய வணிகர்களிடம் இருந்து படைகளுக்கு வேண்டிய குதிரைகளைப் பெறுவதில் பெரிதும் உதவியது.

இறப்பு

இவர் 1491 ஆம் ஆண்டில் காலமானார். இவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இவரது மகனான திம்ம பூபாலன் அவ்வாண்டிலேயே கொல்லப்பட்டார். இன்னொரு மகன் சிறுவனாக இருந்தார். அரச குடும்பத்துக்கு விசுவாசமானவனாக இருந்த துளுவ நரச நாயக்கன், அவரை நரசிம்ம ராயன் என்ற பெயரில் முடிசூட்டுவித்து, அவர் சார்பில் தானே நாட்டின் ஆட்சியைக் கவனித்து வந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads