அ. சகுந்தலா

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

சி. ஐ. டி. சகுந்தலா என அழைக்கப்படும் அருணாச்சலம் சகுந்தலா (A. Sakunthala, இறப்பு: 17 செப்டம்பர் 2024)[1] ஒரு இந்திய நடிகையாவார். 600க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் கதாநாயகியாகவும், குத்தாட்டப் பாடல் நடனக் கலைஞராகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். இவர் நடிகையாக நடித்த சி. ஐ. டி. சங்கர், என்ற முதல் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் "சி.ஐ.டி. சகுந்தலா" என்று குறிப்பிடப்பட்டார். அதன் பிறகு, இவர் மிகவும் பிரபலமானார். சி.ஐ.டி.சங்கர் சாகசங்கள் நிறைந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது 1 மே 1970இல் வெளியிடப்பட்டது. தி. இரா. சுந்தரம் இயக்கியுள்ளார். 'தவப்புதல்வன்' படத்தில், சிவாஜி கணேசன் மீது பழிவாங்கும் இரக்கமற்ற வில்லத்தனமான பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் இரசிகர்களால் பாராட்டப்பட்டது.[2][3]

விரைவான உண்மைகள் அ. சகுந்தலா, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

சகுந்தலாவின் பிறப்பிடம் சேலத்தின் அரிசிபாளையம் என்ற பகுதியாகும். இவரது தந்தை அருணாச்சலமும், தாய் ராஜம்மாளும் பழைய தமிழ்ப்படமான சகுந்தலையின் பெயரை இவருக்கு வைத்தனர். இவருக்கு, நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.[4] இவரது தந்தை திருவெறும்பூரில் பணிபுரிந்து வந்தார்.

சகுந்தலா சென்னையில் லலிதா - பத்மினி - ராகினி நடத்திவந்த நடன நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார். அதன்பிறகு, படிப்படியாக திரைத் துறையில் நுழைந்தார். அந்த நாட்களில், "சூரியன் மேற்கேயும் உதிக்கும்" என்ற நாடகத்தில் நடித்தார். ஆரம்ப நாட்களில், படங்களில் குத்துப்பாட்டு நடனக் கலைஞராக நடனமாடினார். ஒரு சில படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். சிறிய பாத்திரத்தில் நடித்த ஆரம்பித்த பிறகு, தொழில்துறையில் நன்றாக பிரகாசித்தார்.[5]

Remove ads

திரைப்பட வாழ்க்கை

படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், திருடன், தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், இராஜராஜ சோழன், பொன்னூஞ்சல் , எங்கள் தங்க ராஜா, தாய், வைர நெஞ்சம், கிரஹப்பிரவேசம், ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம், ஜஸ்டிஸ் கோபிநாத், அந்தமான் காதலி, அன்பைத்தேடி, நான் வாழவைப்பேன், கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்களில் நடிகர் சிவாஜிகணேசனுடன் நடித்த இவரது கதாபாத்திரம் குறித்து பரவலாக பேசப்பட்டது.

தரிசனம், கல்யாண ஊர்வலம், வீட்டுக்கு ஒரு பிள்ளை, கட்டிலா தொட்டிலா, தேடிவந்த லட்சுமி, திருமலை தென்குமரி, கருந்தேள் கண்ணாயிரம், அதிர்ஷ்டக்காரன், ரோசக்காரி போன்ற் சில குறிப்பிடத்தக்க படங்களும் இவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன.

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருடனும் இவர் என் அண்ணன், இதய வீணை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிற்காலத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திய சகுந்தலா தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.

Remove ads

மறைவு

சகுந்தலா தனது 84-ஆவது அகவையில் 2024 செப்டம்பர் 17 அன்று பெங்களூரில் காலமானார்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads