தமிழ்ச்செல்வி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்ச்செல்வி என்பது சன் தொலைக்காட்சியில் 3 சூன் 2019 முதல் 31 மார்ச்சு 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 247 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை நடிகை மீனா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
Remove ads
கதைசுச்ருக்கம்
தமிழ் செல்வி என்ற கிராமத்து பெண் படிப்பில் மீது அதிகம் ஆர்வம் கொண்டு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்கின்றாள். ஆனால் இவளுக்கு அவளது முறை மாமனை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்தன்று அமுதன் என்பவரை திருமணம் செய்யும் செல்வி. இதனால் இரு குடும்பத்திற்கும் விரிசல் புகுந்த வீட்டில் இவளை ஏற்க மறுக்கும் புது உறவுகள் இவைகளை தாண்டி இவளது படிப்பில் இவள் எப்படி வெற்றி கொள்கிறாள் என்பது தான் கதை.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஆஷிகா கோபால் படுகோனே (1-100) → சாண்ட்ரா பாபு (101-192) → சைத்ரா சக்கரை (193-247) - தமிழ்ச்செல்வி அமுதன்
- அஸ்வின் குமார் (1-46) → விஜய் 47-247) - அமுதன் (தமிழ்ச்செல்வியின் கணவன், இலக்கியாவின் அண்ணன்)
- நிஷ்மா - ருத்ரா சரவணன்
அருண்குமார் - சரவணன்
- வர்ஷிகா → நிஹாரிக்கா - இலக்கியா (தமிழ்ச்செல்வியின் நண்பி, அமுதனின் சகோதரி)
- ப்ரீத்தி குமார் - தில்ருபா (132-247)
- ஜெயகிருஷ்ணன் குமார் - சிவா
தமிழ்ச்செல்வியின் குடும்பம்
- ஜெகநாதன் - தங்கவேல் (தமிழ்ச்செல்வியின் தந்தை)
- தக்ஷயினி - வெண்மதி (தமிழ்ச்செல்வியின் தாய்)
- நேஹா மேனன் - கயல் (தமிழ்ச்செல்வியின் சகோதரி)
தமிழ்ச்செல்வியின் மாமா குடும்பம்
- வாசு விக்ரம் - சக்திவேல் (தமிழ்ச்செல்வியின் மாமா)
- தீபா ஐயர் - வளர்மதி (தமிழ்ச்செல்வியின் அத்தை)
- சுரேஷ் - (சக்திவேலின் மகன்)
- குமரேசன் - வெற்றிவேல் (தமிழ்ச்செல்வியின் மாமா, சக்திவேலின் தம்பி )
- அருண் - சரவணன் (தமிழ்ச்செல்வியின் முறை மாமன்)
- ராஜேந்திரநாத் - பழனிசாமி (சரவணனின் அப்பா)
- ராகவி - பழனியம்மாள் (சரவணனின் அம்மா, சக்திவேலின் சகோதரி)
அமுதன் குடும்பத்தினர்
- சபிதா ஆனந்த் - (அமுதன் மற்றும் இலக்கியாவின் தாய்)
- மனுஷ்
- வனஜா
- சுஹாசினி
துணை கதாபாத்திரம்
- உஷா சாய் - நமிதா (தமிழ்ச்செல்வியின் நண்பி)
- வி.ஜே நிஷா - போர்க்கொடி
- அவினாஷ் அசோக்
- கௌதமி
Remove ads
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதலில் சந்திரகுமாரி என்ற தொடர் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 3 சூன் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 5 ஆகஸ்ட் 2019 முதல் பிற்பகல் 1 மணிக்கு நேரம் மாற்றப்பட்டடு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 247 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
மறுதயாரிப்பு
இந்த தொடர் தெலுங்கு மொழியில் சுபா சங்கல்பம்என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரை சன் நெக்ட்ஸ் என்ற ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads