சிக்க வீர ராஜேந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிக்க வீர ராஜேந்திரன் (Chikavira Rajendra or Chikka Vira Rajendra) (கன்னடம்:ಚಿಕವೀರ/ಚಿಕ್ಕವೀರ ರಾಜೇಂದ್ರ}}, தென்னிந்தியாவின் குடகு இராச்சியத்தை 1820 முதல் 1834 முடிய 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இறுதி மன்னர் ஆவார்.[1] இவரது இயற்பெயர் வீர ராஜேந்திரன் ஆகும். ஆனால் இப்பெயரே இவரது மாமாவுக்கும் இருந்தது. இவர்கள் இருவரும் குடகின் ஆட்சியாளர்களாக இருந்ததால், சிக்க (கன்னடம் மற்றும் குடகு மொழியில் சிறிய என்று பொருள்) என்ற முன்னொட்டு இவரை வேறுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இவர் இரண்டாம் லிங்க ராஜேந்திரனின் மகன் ஆவார்.[2]

Remove ads
பிரித்தானிய இந்தியாவுடன் குடகு இராச்சியம் இணைத்தல்

சிக்க வீர ராஜேந்திரன் 1834 ஏப்ரல் 24 அன்று மன்னர் பதவியில் இருந்து ஆங்கிலேயர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்; இவரது ராச்சியம் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இவர் தனது ராச்சியத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழக்கு நடத்த தன் விருப்பமான மகள் கவுரம்மாவுடன் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பு வரணாசியில் சில ஆண்டுகள் கழித்தார்.
வரலாறு

குடகு இராச்சியத்தை 1834ல் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்ட பின்னர், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள், மன்னர் சிக்க வீர ராஜேந்திரனுக்கு ஆண்டுக்கு 12,000 பவுண்டு தொகை ஓய்வூதியமாக வழங்கினர். ஓய்வூதியத் தொகையுடன் வாரணாசியில் வாழ்ந்த சிக்க வீர ராஜேந்திரனின் மூன்றாம் மகள் முத்தம்மா என்ற கங்கா மகாராணியை, நேபாள இராச்சியத்தின் ராணா வம்ச, நேபாள பிரதம அமைச்சர் ஜங் பகதூர் ராணாவுக்கு மூனாவது மனைவியானார். 1850 திசம்பரில் திருமணம் நடைபெற்றது.[3]
பின்னர் மேஜர் டிமாண்டுடன் சிக்க வீர இராஜேந்திரன் தன் இரு மனைவியர் மற்றும் ஒரு மகளுடன் 12 மே 1852 அன்று சவுத்தாம்ப்டனை அடைந்த அவர் யூக்சின் மூலம் இங்கிலாந்து சென்றார். [4] அவர்கள் இருட்டிய பிறகு ராட்லியின் விடுத்திக்கு தங்கள் இடத்தை மாற்றிக்கொண்டனர். ஒரு உள்ளூர் செய்தித்தாள் அரசர் தனது சாதியை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டது. ஆனால் இவரது ஆறு வேலைக்காரர்கள் சைவ உணவு உண்பவர்கள் என்றும், விடுதிக்குப் பின்னால் உள்ள திறந்தவெளியில் சமைத்தவர்கள் என்றும் விடுதியில் உள்ள நடைபாதைகளிலோ அல்லது மேசைகளுக்கு அடியிலோ உறங்கினர்.
இலண்டனை அடைந்ததும், குடகின் முன்னாள் மன்னர் பல வேண்டுகோள்களை விடுத்தார். 1853 நவம்பர் 18 அன்று, லண்டன் ஸ்டாண்டர்டில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டது, அதில் இவர் தனது நிலைமையை விவரித்தார். 1799 ஆம் ஆண்டில் ஜெனரல் அபெர்க்ரோம்பி மற்றும் பம்பாய் இராணுவம் குடகு வழியாகச் சென்று கார்ன்வாலிசில் சேர தனது மாமா உதவியதாகவும், அதன் மூலம் திப்பு சுல்தானுக்கு எதிரான போர்த் தொடரில் கிழக்கிந்திய கம்பெனிக்கு உதவியதாகவும் இவர் சுட்டிக்காட்டினார். 1830 இல் தன் குடும்பத்திற்கு எதிராக செயல்பட்டு மைசூருக்கு சென்ற தனது மைத்துனர் சன்ன பசவையாவைப் பற்றியும் இவர் எழுதினார். சிக்க ராஜேந்திரன் பின்னர் மைசூருக்கு தப்பிச் செல்லும் போது குடகில் சில அதிகாரிகளைக் கொன்ற சின்ன பசவையாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஆங்கிலேயரிடம் கேட்டுக் கொண்டார். கிழக்கிந்திய கம்பெனி, சின்ன பசவையா தங்களிடம் பாதுகாப்பை கோரியதால் தங்களால் அவரை ஒப்படைக்க முடியாது என்று பதிலளித்தது. இதனால் மலபாரிலிருந்து மைசூர் நோக்கிச் சென்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதுவர் சிக்க ராஜேந்திரனால் தடுத்து காவலில் வைக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்படாத நிலையில், கிழக்கிந்திய நிறுவனம் வலுக்கட்டாயமாக அரண்மனையைக் கைப்பற்றியது (£160,000 மதிப்புடைய இவரது உடைமைகளை எடுத்துக்கொண்டது). 14 ஆண்டுகளாக வரணாசியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், தனக்கு 180,000 பவுண்டுகள் திருப்பித் தரப்பட உள்ளதாகக் கூறினார்.
24 செப்டம்பர் 1859ல் உடல் நலக் குறைவால், இலண்டனில் உள்ள மைதா மலைப்பகுதியில், சிக்க வீர இராஜேந்திரன் மறைந்தார். [5][6] இவரது உடல் கென்சல் பசுமை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Remove ads
இலக்கியங்களிலும், ஊடகங்களிலும்
ஞானபீட விருது பெற்ற புகழ் பெற்ற கன்னட மொழி எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் [7], குடகு மன்னர் சிக்க வீர இராஜேந்திரன் வரலாற்றை, சிக்கவீர ராஜேந்திரன் எனும் புதினத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
குடகு மன்னர் சிக்க வீர இராஜேந்திரன் வரலாற்றை, 1992ல் கன்னட மொழியில், தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பியது.[8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads