குடகு இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடகு இராச்சியம் (Kodagu Kingdom or Haleri Kingdom) இந்தியாவின் தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மலைப் பிரதேசங்களை 1633 முதல் 1834 முடிய 200 ஆண்டுகள் வரை, ஹலேரி மன்னர்கள் ஆண்டப் பகுதியாகும். குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிக்கேரி நகரம் ஆகும்.

Remove ads
வரலாறு
சிவபக்தி கொண்ட லிங்காயத்துக்களான, குடகு இராச்சிய ஹலேரி ஆட்சியாளர்கள், கேளடி நாயக்கர்கள்களின் ஒரு கிளையினர் ஆவார். கேளடி நாயக்கர் வம்சத்தின் சதாசிவ நாயக்கரின் மருமகன் வீரராஜா என்பவர் குடகு இராச்சியத்தை 1633ல் நிறுவினார்.[1]
குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிகேரியில் உள்ள புகழ் பெற்ற நல்குநாடு அரண்மனையை கட்டியவர் மன்னர் தொட்ட வீர ராஜேந்திரன் ஆவார்.[2]
குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர ராஜேநதிரனுடன் ஏற்பட்ட பிணக்குகளால், குடகு இராச்சியம் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மேலும் சிக்க வீர இராஜேந்திரன் தன் இராச்சியத்தை வழக்காடி மீட்க ஐக்கிய இராச்சியத்திற்கு சென்று அங்கேயே இறந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், குடகுப் பகுதிகள் மற்றும் மைசூர் அரசுகள், இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, கர்நாடகா மாநிலமாக நிறுவப்பட்டது.
Remove ads
மரபுரிமைப் பேறுகள்
குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்கவீர ராஜேந்திரன் வரலாறு குறித்து, ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்பவர் கன்னட மொழியில் சிக்கவீர ராஜேந்திரன் எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதியுள்ளார்.
படக்காட்சியகம்
- குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர ராஜேந்திரன், படம், ஆண்டு 1805)
- மன்னர் லிங்க ராஜேந்திரன் மடிகேரியில் கட்டிய ஓம்காரஸ்வரர் கோயில்
- நல்குநாடு அரண்மனை, மடிகேரி
- விக்டோரியா மகாராணி தத்தெடுத்த, சிக்க வீர ராஜேந்திரனின் மகள் கௌரம்மா.
குடகின் ஆட்சியாளர்கள்
- முத்து ராஜா I (1633 - 1687)
- தொட்ட வீரப்பா (1687 - 1736)
- சிக்க வீரப்பா (1736 - 1766)
- தேவப்பா ராஜா (1766 - 1770)
- இரண்டாம் முத்து இராஜா (முத்தையா) (1770 - 1774)
- இரண்டாம் அப்பாஜி ராஜா (1774 - 1775)
- முதலாம் லிங்க ராஜேந்திரன் (1775- 1780)
- தொட்ட வீர இராஜேந்திரன் (1780 - 1809)
- தேவம்மாஜி (1809 - 1811)
- இரண்டாம் லிங்க ராஜேந்திரன் (1811 - 1820)
- சிக்க வீர ராஜேந்திரன் (1820 - 1834)[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads