சிங்கப்பூரின் பிரதமர்

From Wikipedia, the free encyclopedia

சிங்கப்பூரின் பிரதமர்
Remove ads

சிங்கப்பூர் குடியரசின் பிரதமர் (Prime Minister of the Republic of Singapore, மலாய்: Perdana Menteri Republik Singapura; சீன மொழி: 新加坡共和国总理) சிங்கப்பூர் குடியரசின் தலைவராவார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கைக்கு உரியவர் என குடியரசுத் தலைவர் கருதும் நபர் பிரதமராக நியமிக்கப்படுகின்றார்.

விரைவான உண்மைகள் சிங்கப்பூர் குடியரசு பிரதமர், வாழுமிடம் ...

சிங்கப்பூரின் பிரதமர் பதவி 1959ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றது; பிரித்தானியப் பேரரசுக்குள்ளேயே தனிநாடாக தன்னாட்சி பெற்ற பின்னர் அப்போதைய சிங்கப்பூர் ஆளுநரால் லீ குவான் யூ பிரதமராக நியமிக்கப்பட்டார். மலாயா கூட்டமைப்பில் இணைந்து மலேசியாவின் மாநிலமாக 1963 முதல் 1965 வரை இருந்தபோதும் பின்னர் 1965இல் விடுதலை பெற்றபோதும் இப்பதவியின் பெயர் சிங்கப்பூரின் பிரதமர் என்றே நீடித்தது.

சிங்கப்பூரின் பிரதமராக லீ குவான் யூ 1959 முதல் 1990 வரை பதிவியிலிருந்தார். இவரைத் தொடர்ந்து கோ சொக் தொங் பதவியேற்றார்; இவருக்கு பிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. கோ ஆகத்து 12, 2004இல் பணி ஓய்வு பெற்றார். இவரைத் தொடர்ந்து லீ குவான் யூவின் மகன் லீ சியன் லூங் பதவியேற்றார். புதிய பிரதமருக்கு உதவிபுரிய கோ மூத்த அமைச்சராகவும் தந்தை லீ மதியுரை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இருவரும் 2011இல் பதவி விலகினர்.

Remove ads

சிங்கப்பூர் பிரதமர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண், பிரதமர் ...
Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads