லீ குவான் யூ

சிங்கப்பூரின் முதல் பிரதமர் From Wikipedia, the free encyclopedia

லீ குவான் யூ
Remove ads

லீ குவான் யூ (Lee Kuan Yew, 16 செப்டம்பர் 1923[4] - 23 மார்ச்சு 2015) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார். 1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் லீ குவான் யூLee Kuan Yew, 1-வது சிங்கப்பூர் பிரதமர் ...

சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1948 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சோங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -இல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

Remove ads

குடும்பம்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சிங்கப்பூர்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதாதையார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் நீரிணைக் குடியேற்றத்துக்கு (Strait settlements) 1863ல் வந்ததாக கூறி உள்ளார். லீ குவான் யூவின் தாத்தா லீ ஹூட் லாங் 1871ல் சிங்கப்பூரில் பிறந்தவராவார். லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். லீயின் குடும்பத்தினர் பலர் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவரது இளைய மகன், லீ ஹசைன் யாங், முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மேலும் சிங்டெல் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

Remove ads

இளமைக் காலம்

லீ சிங்கப்பூரில் 92 கம்போங் ஜாவா சாலை 1923-இல் ஒரு பிரித்தானியக் குடிமகனாகப் பிறந்தார். லீ முதன் முதலில் டெலோக் குராவோ முதன்மைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார். அவர் இந்நிறுவனத்திற்காக கிரிக்கெட், டென்னிஸ், சதுரங்கம் விளையாடி பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளார். லண்டனில் படிப்பு முடித்து அவர் 1949ல் சிங்கப்பூர் திரும்பினார்.

விருதுகள்

  • அரசு மரியாதைகள்
    • தி ஆர்டர் ஆப் தி ரைசிங் சன் (1967)
    • ஆர்டர் ஆப் கம்பேனியன்ஸ் ஆப் ஹானர் (1970)
    • கனைட் கிரான்ட் கிராஸ் ஆப் செயின்ட் மைக்கேல் மற்றும் புனித ஜார்ஜ் (1972)
    • தி ப்ரிடம் ஆப் தி சிட்டி ஆப் லன்டன் (1982)
    • தி சேரி பாதுகா மாஹகோடா ஜோர் (1984)
    • தி ஆர்டர் ஆப் கிரேட் லீடர் (1988)
  • 2002 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு முயற்சிகள் வளர்ச்சிக்காக லீ முறையாக சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் தனது பதவி உயர்வு அங்கீகாரமாக இம்பீரியல் காலேஜ் லண்டன் பெல்லோஷிப்பிற்கு அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை

லீ குவான் யூ, 05 பெப்ரவரி2015 அன்று நிமோனியா காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக உள்ளதாக அரசு அறிவித்தது.[5][6][7] 2015ஆம் ஆண்டு மார்ச்சு 22ந்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார் [8] சிங்கப்பூர் நேரம் ஞாயிறு (23 மார்ச்சு) அதிகாலை 3.18 மணி அளவில் இறந்தார்.[9][10]

இறுதிச் சடங்கு

லீ குவான் யூவின் மறைவை ஒட்டி மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை ஒரு வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும்.[11] அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில்[12] மண்டாய் தகனச் சாலையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.[13] மேலும் நரேந்திர மோதி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து நாடாளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.[14]

Remove ads

இந்தியாவில்

லீ குவான் யூவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது.[15] மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார்.[16] மேலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads