சிங்கம் 2 (திரைப்படம்)
ஹரி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கம் 2 (Singam II) 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம்.[4] கதாபாத்திரங்களாக சூர்யா, ஹன்சிகா மோட்வானி, அனுஷ்கா செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இத்திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 5 ஜூலை 2013 அன்று வெளிவந்தது.[5]
Remove ads
நடிகர்கள்
- சூர்யா - துரை சிங்கம்
- ஹன்சிகா மோட்வானி - சத்யா
- அனுஷ்கா செட்டி - காவியா
- டேனி சபானி
- விவேக் - ஏழுமலை
- சந்தானம்
- ரகுமான்
- முகேஷ் ரிஷி
- ராதா ரவி - துரை சிங்கத்தின் தந்தை
- நாசர் - மகாலிங்கம்; காவியாவின் தந்தை
- விஜயகுமார்
- நிழல்கள் ரவி
- தலைவாசல் விஜய்
- மனோரமா - காவியாவின் பாட்டி
- ஜானகி சபேஷ் - காவியாவின் தாய்
- சுமித்ரா
- மன்சூர் அலி கான்
- ஸ்ரீனிவாசன்
- யுவராணி - துரைசிங்கத்தின் சகோதரி
- சிறப்புத் தோற்றத்தில் அஞ்சலி
படப்பிடிப்பு
இத்திரைப்படம் சென்னை, கேரளா, ஹைதெராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமெடுக்கப்பட்டது. படத்தின் சிறப்பு காட்சிகள், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை டர்பன், கேப் டவுன், தென் ஆப்ரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.[6]
கதைச் சுருக்கம்
துரை சிங்கம் (சூர்யா) தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருந்து கொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்கிறார். கடத்தப்படுவது ஆயுதம் அல்ல போதை பொருட்கள் என்ற உண்மையை கண்டறிகிறார். இதில் சில உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, காவல் துறை அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டு, அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்.
ஒலிப்பதிவு
சிங்கம் படத்திற்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களே சிங்கம் 2 படத்திற்கும் இசை அமைகின்றார்.[7][8] பாடல்கள் அதிகாரபூர்வமாக 2 ஜூன் 2013 அன்று வெளியிடப்பட்டது..[9][10]
அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரி எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா அவர்கள்.[11]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads