ஹன்சிகா மோட்வானி

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

ஹன்சிகா மோட்வானி
Remove ads

ஹன்சிகா மோட்வானி (ஆங்கிலம்: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஓர் இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.

விரைவான உண்மைகள் ஹன்சிகா மோட்வானி, இயற் பெயர் ...
Remove ads

சொந்த வாழ்க்கை

இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.[1] ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் பன்னாட்டுப் பள்ளியில் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை

ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு சன்யாசியின் மேல் காதல் கொள்வதைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.[2]

பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக ஆப் கா சரூர் - த ரியல் லவ் ஸ்டோரி யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது, இத்திரைப்படம் இடைப்பட்ட வெற்றியைக் கொடுத்தது. இதன் பின்னர் ஹீ: த ஒன்லி ஒன் எனத் தலைப்பிடப்பட்ட இந்தித் திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டிருந்தார்,[3] இப்படம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 15 பிப்ரவரி 2008 அன்று வெளியானது, இது ஹன்சிகா இதுவரை நடித்த ஒரேயொரு கன்னடத் திரைப்படமாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது. மேலும் மஸ்கா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் ராமுடன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Remove ads

திரைப்பட விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் திரைப்படம், ஆண்டு ...
மேலதிகத் தகவல்கள் தொலைக்காட்சி, ஆண்டு ...

குறிப்புகள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads