சிசுநாகன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிசுநாகன் (Shishunaga) (கிமு 444 – 363) வட இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தில் இருந்த மகத நாட்டில், கிமு 412ல் சிசுநாக வம்சத்தை நிறுவியவர். மகதத்தை ஆண்ட ஹரியங்கா வம்ச இறுதி மன்னர் நாகதாசகரின் அமைச்சராக சிசுநாகன் இருந்தவர்.

விரைவான உண்மைகள் சிசுநாகன், சிசுநாக வம்சத்தை நிறுவியவர். ...

ஹரியங்கா வம்ச மன்னர் நாகதாசகனுக்கு எதிராக மக்களை தூண்டி, கிளர்ச்சியின் மூலம் ஹரியங்கா வம்ச மன்னரை நீக்கி, சிசுநாகன் மகத நாட்டின் மன்னரானவர். இவரது தலைநகரமாக ராஜகிரகம் இருந்தது. இவரது மகன் காலச்சோகன் வாரணாசியின் ஆளுநராக இருந்தார்.

Remove ads

இளமை

வைசாலி நாட்டை ஆண்ட லிச்சாவி குலத்தில் சிசுநாகன் பிறந்ததாக மகாவம்சம் நூல் கூறுகிறது. [1]. மகத நாட்டின், ஹரியங்கா வம்ச இறுதி மன்னரான நாகதாசகனின் அமைச்சராக சிசுநாகன் இருந்தார். மன்னர் நாகதசகனுக்கு எதிரான கிளர்ச்சியைப் பயன்படுத்தி, சிசுநாகன் மகத நாட்டு மன்னரானார்.[2]

ஆட்சிக் காலம்

மகத நாட்டை சிசுநாகன் கிமு 413 முதல் 395 முடிய ஆண்டார்.[3][4] துவக்கத்தில் ராஜ்கிரகத்தை தலைநகராகக் கொண்டார். பின்னர் தலைநகரத்தை வைசாலிக்கு மாற்றினார். சிசுநாகன் அவந்தி நாட்டை வென்று பிரதியோத்தா வம்சப் பெருமயை அழித்தவர்.[2]

நிலப்பரப்பு விரிவாக்கம்

கிமு 425ல் சிசுநாகன் வட இந்தியா முழுமையையும் கைப்பற்றி மகத நாட்டை விரிவாக்கினான்.

சிசுநாகனுக்குப் பின் அவரது மகன் காலச்சோகன் மகத நாட்டின் அரியணை ஏறினார்.[2]

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads