லிச்சாவிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லிச்சாவிகள் (Licchavis) ஆண்ட லிச்சாவி நாடு, பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். லிச்சாவிகளின் தலைநகரமாக வைசாலி இருந்தது.



லிச்சாவி நாட்டவர்களின் அருகில் வஜ்ஜி நாடு, மல்ல நாடு, சாக்கிய நாடு, கோலிய நாடுகள் போன்ற குறுநில மன்னர்கள் ஆண்டனர்.
பிற்காலத்தில் மகதப் பேரரசர் அஜாதசத்ரு வஜ்ஜி நாட்டை மகதப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். [1][2]
லிச்சாவி குல கூட்டமைப்பினர், குடியரசு முறையில் லிச்சாவி நாட்டை ஆண்டதாகவும், லிச்சாவிகளின் தலைவன் ராஜா என்ற பட்டத்துடன் விளங்கியதாக, கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலின் 11வது அத்தியாத்தில் தெரிவிக்கிறார். பௌத்த சாத்திரமான மகாபரிநிர்வாண சூத்திரத்தில், லிச்சாவிகள், சூரிய குல சத்திரியர்கள் என்றும், கௌதம புத்தர், லிச்சாவிகளில் ஒரு பிரிவினரான சாக்கியர் என்றும் தெரிவிக்கிறது.[3]
திக்க நிக்காய எனும் பௌத்த சாத்திரத்தில் லிச்சாவிகள் வசிஷ்ட கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிப்பிடுகிறது.[4]
மனுதரும சாத்திரத்தில் அத்தியாயம் பத்து, சுலோகம் 22ன் படி, லிச்சாவிகள் விராத்திய சத்திரியப் பிரிவினர் என்று புக்லர் எனும் வரலாற்று ஆய்வாளர் கருதுகிறார்.[5][6]
லிச்சாவிகளின் பூர்வீகம் தற்கால வாரணாசி என்பர். தற்கால நேபாளத்தின் தெற்கிலும், வடக்கு பிகார் எல்லையில் அமைந்த தராய் சமவெளியில், லிச்சாவிகள் தங்களது லிச்சாவி நாட்டை நிறுவினர். லிச்சாவிகள், மகத நாட்டிற்கு கட்டுப்பட்ட குறுநில மன்னர்கள் ஆவார்.
மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் காலத்திற்கு முன்னரே, லிச்சாவிகள் வேளாண்மைத் தொழிலை நன்கு செய்து வாழ்ந்தனர். சமண அறிஞர் பத்திரபாகு எழுதிய கல்பசூத்திரம் எனும் நூலில், மல்லர்கள், வஜ்ஜ்ஜிகள், மல்லர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள், சாக்கியர்கள், கோலியர்கள் போன்ற மகாஜனபதங்களை இணைந்து ஒரு கூட்டமைப்பை நிறுவி, மகத நாட்டை எதிர்கொண்டனர் என குறிப்பிடுகிறார். மேலும் கூட்டமைப்பின் தலைவராக கோசல மன்னர் சோதகர் இருந்ததாகவும், அவரது தங்கை திரிசலா, மகாவீரரின் தாய் என்றும் குறிப்பிடுகிறார். [7]
Remove ads
லிச்சாவிகளும் குப்தர்களும்

மகத நாட்டின் குப்தப் பேரரசர் முதலாம் சந்திரகுப்தர், நேபாள லிச்சாவிகளின் இளவரசி குமாரதேவியை மணந்தவர்.
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரு பக்கத்தில் இலக்குமியின் உருவமும், மறுபுறத்தில் முதலாம் சந்திரகுப்தர்-குமாரதேவியின் உருவமும் பதியப்பட்டிருக்கும்.[8] பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்களில், சமுத்திரகுப்தர் தன்னை லிச்சாவிகளின் பேரன் எனக் குறித்துள்ளார்.[9]
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads