சிஞ்சார் மலைகள்

ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைதொடரா From Wikipedia, the free encyclopedia

சிஞ்சார் மலைகள்map
Remove ads

சிஞ்சார் மலைகள் (Sinjar Mountains)[1][2] (அரபி: جبل سنجار Jabal Sinjār; வடமேற்கு ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக 100 கி.மீ. தொலைவிற்கும், 1,463 மீட்டர் உயரத்திலும் பரந்துபட்ட ஒரு மலைதொடராகும். சிரியாவின் வடகிழக்கில் இம்மலைத்தொடர் 25 கி.மீ. நீளத்திற்கு பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தெற்கில் சிஞ்சார் நகரம் அமைந்துள்ளது.[3][4] யாசிதி மக்களால் இம்மலைத்தொடர் புனிதமாகக் கருதப்படுகிறது.[5][6]

Thumb
சிஞ்சார் சமவெளியில் வேளாண்மை
Thumb
சிஞ்சார் மலைத்தொடரின் மேற்கில் அமைந்த ஜெபல் சிஞ்சார் பிரதேசம்
விரைவான உண்மைகள் சிஞ்சார் மலைகள்سنجارŞengal شەنگال/شەنگار, உயர்ந்த புள்ளி ...
Remove ads

மக்கள் & வரலாறு

Thumb
சிஞ்சார் மலைத்தொடரில் கால்நடைகளை மேய்க்கும் யசீதி மக்கள்

வரலாற்று முந்தைய காலத்தில் இம்மலைத்தொடர், அசிரியர்களுக்கும், இட்டைட்டுகளுக்கும் எல்லையாக விளங்கியது. கிமு 538-இல் பார்த்தியப் பேரரசு ஆட்சியிலும், பின்னர் சிஞ்சார் மலைகளை பார்த்தியர்களிடமிருந்து உரோமைப் பேரரசு கைப்பற்றி கிமு 115 வரை ஆட்சி செலுத்தியது. கிபி 363-இல் பைசாந்தியப் பேரரசுக்கும், சாசானியப் பேரரசுக்கும் நடைபெற்ற போரின் முடிவில் சிஞ்சார் மலைகள் இரு பேரரசுகளின் எல்லைகளாக விளங்கியது.

பாரசீகப் பேரரசின் ஆட்சியால், இம்மலைத்தொடர் பகுதிகளில் சொராட்டிரிய நெறி பரவத்தொடங்கியது. கிபி 4-ஆம் நூற்றாண்டில் இம்மலைப்பகுதிகளில் நெஸ்டோரியன் கிறித்தவம் தழைத்தது. கிபி 6-ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால், இம்மலைதொடர்களில் வாழ்ந்த கிறித்தவர்கள், இசுலாமிய கலீபாக்களுக்கு ஜிசியா வரியைக் கட்டி வாழ்ந்தனர்.[7]

கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் சிஞ்சார் மலைத்தொடர்களில் யசீதி மக்கள் கால்நடைகளை மேய்த்து வாழ்கின்றனர்.[8][9] ஊழிக்காலத்தின் முடிவில் நோவாவின் பேழை இம்மலைத்தொடரின் உயர்ந்த முகட்டில் நின்றதாக பழைய ஏற்பாடு கூறுகிறது.[10]

1920-களில் யசீதி மக்கள் அரேபியர்களாலும், மற்றவர்களாலும் துரத்தப்பட்டு இம்மலையில் தஞ்சமடைந்தனர்.[8]

3 ஆகஸ்டு 2014 அன்று சிஞ்சார் நகரம் இசுலாமிய அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 40,000 யசீதி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[11][12] [13][14] யசீதி மக்களுக்கு எதிரான இசுலாமிய அரசின் கொடூரங்களால் மக்கள் நீர், உணவு, உடை, உறைவிடம் இன்றி அலைந்து திரிந்தனர்.[15] யசீதி மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசின் விமானப் படைகள் வானிலிருந்து உணவு, நீர், மருந்துகளை யசீதி மக்களுக்கு வழங்கினர்.[16][17][18][19] 10 ஆகஸ்டு 2014 முதல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து, குர்து மக்கள் படையினர் யசீதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.[14][20][21][22] இசுலாமியப் படைகளால் 7,000 யசீதிப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு, 7,000 யசீதி ஆண்களின் தலை வீசப்பட்டு கொல்லப்பட்டனர்.[16][21][23] பல யசீதிப் பெண்கள் இசுலாமிய அரசுப் படையினருக்கு அஞ்சி சிஞ்சார் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.[24]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads