சித்தார்த்தநகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்தார்த்தநகர் (Siddharthanagar) (முன்னர் இதன் பெயர் பைரவா) (Bhairahawa) நேபாள நாட்டின் மாநில எண் 5ல் உள்ள ரூபந்தேகி மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் சித்தார்த்தநகர் सिद्धार्थनगर, நாடு ...

இந்திய-நேபாள எல்லையோரத்தில், நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்துள்ள இந்நகரம், தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு மேற்கே 265 கி.மீ. தொலைவில் உள்ளது.

கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம், இந்நகரத்திற்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்நகரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் பூத்வல் நகரம் உள்ளது.

சித்தார்த்தநகர், நேபாளத்தின் பெருந்தொழில் நகரம் ஆகும்.

இந்தியாவின் எல்லைப்புற வணிகத்தில், வீரகஞ்ச் நகரத்திற்கு அடுத்து இரண்டாமிடத்தில் சித்தார்த்தநகர் உள்ளது.

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சித்தாத்தநகரின் மக்கள்தொகை 63,528 ஆகும்.[1]

பொருளாதாரம்

சித்தார்த்தநகர் நேபாளத்தின் பெரிய எல்லைப்புற வணிக மையம் ஆகும்.

இந்நகரத்திற்கு தெற்கே 5 கி.மீ. தொலவில் இந்தியா-நேபாள எல்லையில் சுங்கச் சாவடி செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து வணிகப் பொருட்கள், இச்சோதனைச் சாவடியை கடந்து நேபாளத்திற்கு வரவேண்டும்.

சித்தார்த்தநகரைச் சுற்றிலும் பல சிறு, குறு மற்றும் பெருந்தொழிற்சாலைகள் உள்ளது.

போக்குவரத்து

வானூர்தி

இந்நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கௌதம புத்தா வானூர்தி நிலையத்திலிருந்து, தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு நேரடி வானூர்தி சேவைகள் உள்ளது.

மேலும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கு, இங்கிருந்து பேருந்து சேவைகள் உள்ளது.

ஆன்மீகச் சுற்றுலாத் தலங்கள்

தட்பவெப்பம்

இந்நகரின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 44.8 °C ஆகவும்; குளிர்கால அதிகபட்ச வெப்பம் -1.1 °C ஆக பதிவாகியுள்ளது. [2]

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சித்தார்த்தநகர் (1981-2010), மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads