தேவதகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேவதகா (Devdaha (Dev Daha, Devadaha) நேபாள நாட்டின் மாநில எண் 5ல் உள்ள ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும்.[2][3][4] இந்நகராட்சி பூத்வல் நகரத்திற்கு கிழக்கிலும், நவல்பராசியை எல்லையாகவும் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் தேவதகா நகராட்சி देवदह नगरपालिका, நாடு ...

இந்நகரம் கௌத புத்தரின் தாயான மாயா மற்றும் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் பிறந்த இடமாகும் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது. [5]

Remove ads

வரலாறு

கோலியர்களின் நகரமான தேவதகா நகரத்திற்கு கௌதம புத்தர் வரும் போது, பிக்குகளுக்கு பல தலைப்புகள் குறித்து உபதேசம் செய்துள்ளார்.[6] [7] தேவதகா நகரம், கௌதம புத்தரின் தாயும், சிற்றனையான மாயா மற்றும் மகாபிரஜாபதி கௌதமியின் பிறந்த ஊராகும்.

தேவதகா பூங்கா

கபிலவஸ்துவிலிருந்து, மகப்பேறுக்காக மாயா தான் பிறந்த ஊரான தேவதகா நகரத்திற்கு செல்லும் வழியில், லும்பினித் தோட்டத்தில் கௌதம புத்தரை ஈன்றார்.[8] கௌதம புத்தர் பிறந்த ஏழாம் நாளில் மாயா, தேவதகா நகரத்தில் இறந்தார். இதனால் கௌதம புத்தரை, அவரது சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார். கௌதம புத்தர் தனது இளமைக் காலத்தில் அடிக்கடி தேவதகா நகரத்திற்குச் சென்று வருவார். புத்தர் ஞானம் பெற்று முதன் முறையாக தேவதகா நகரத்திற்கு வருகை தந்த போது நகர மக்களால் பெரிய அளவில் வரவேற்பு வழங்கப்பட்டது.

தேவதகா நகரத்தின் கிழக்கு நுழைவு வாயிலில் பெரும் பூங்காவும், பௌத்த விகாரையும் உள்ளது. இங்குள்ள விகாரையில் 7 அடி உயர புத்தர் சிலையும், தங்கத்தால் மெருகூட்டபப்ட்ட சாரிபுத்திரரின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads