சித்திரதுர்க்கா மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்திரதுர்க்கா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சித்திரதுர்க்கா நகரத்தில் உள்ளது. வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
Remove ads
அமைவிடம்
இம்மாவட்டம்தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும், மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும், கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
- சித்திரதுர்க்கா
- ஹிரியூர்
- ஹொசதுர்கா
- மொளகால்கேரே
- சள்ளகேரே
- ஹொளல்கெரே
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,659,456 ஆகும். அதில் 840,843 ஆண்கள் மற்றும் 818,613 r பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.71 % ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 91.63 %, இசுலாமியர் 7.76 %, சமணர்கள் 0.23 %, கிறித்தவர்கள் 0.19 % மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர்.[3]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads