சிந்துலி மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சிந்துலி மாவட்டம்map
Remove ads

சிந்துலி மாவட்டம் (Sindhuli District) (நேபாளி: सिन्धुली जिल्लाகேட்க), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.[ நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றான சிந்துலி மாவட்டம், ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கமலாமாய் நகரம் ஆகும்.

Thumb
நேபாளத்தில் சிந்துலி மாவட்டத்தின் மைவிடம்

இம்மாவட்டம் 2,491 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,96,192 ஆக உள்ளது.[1][2]இம்மாவட்டத்தில் நேபாள மொழி, மஹர் மொழி, தமாங் மொழி மற்றும் செபாங் மொழிகள் பேசப்படுகிறது. முன்பு மரங்களை வெட்டி பிழைப்பு நடத்திய இம்மாவட்டட்தில் அதிகமாக வாழும் தமாங் இன மலை வாழ் மக்கள், அரசின் தடை காரணமாக, தற்போது கால்நடைகளை வளர்ப்பதன் கிடைக்கும் வருவாயை நம்பியுள்ளனர்.

Remove ads

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

மத்திய நேபாளத்தில் அமைந்த இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம்,மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று நிலைகளில் காணப்படுகிறது. [3]

கிராமிய நகராட்சிகளும், நகரபுற நகராட்சிகளும்

Thumb
சிந்துலி மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

சிந்துலி மாவட்டத்தில் ஐம்பத்தி நான்கு கிராமிய நகராட்சிகளும், கமலாமாய் மற்றும் தூத்தௌலி என இரண்டு நகரபுற நகராட்சிகளையும் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads