பாக்மதி மாநிலம்

From Wikipedia, the free encyclopedia

பாக்மதி மாநிலம்
Remove ads

பாக்மதி பிரதேசம் (Province No. 3), புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, 20 செப்டம்பர் 2015 அன்று நிர்வாக வசதிக்காக நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. [1] நேபாள மாநில எண் 3 நேபாள மாநிலங்களில் மூன்றாவதாக அமைந்துள்ளது. இம்மாநிலத்திற்கு பாக்மதி பிரதேசம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரம் ஹெடௌதா ஆகும்.

விரைவான உண்மைகள் பாக்மதி மாநிலம் बागमती प्रदेशபாக்மதி பிரதேசம், மாநிலம் ...

இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் காடுகளையும், மலைகளையும், மலைத்தொடர்களையும் கொண்டது. இம்மாநிலத்தில் நேபாளத்தின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்களால் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும். நேபாள மாநில எண் 3-இன் பரப்பளவு 20,300 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள் தொகை 55,29,452 ஆகவும் உள்ளது[2]

Remove ads

அமைவிடம்

காடுகள், மலைகள், மலைத்தொடர்களுடைய 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதிகளையும், தெற்கில் நேபாள மாநில எண் 2யும், கிழக்கில் நேபாள மாநில எண் 1-யும், மேற்கில் நேபாள மாநில எண் 4-யும் எல்லையாகக் கொண்டுள்ளது.

சமயம்

பாக்மதி மாநிலத்தில் இந்து சமயத்தினர் 71.78%, திபெத்திய பௌத்தம் 23.28%, கிறித்துவம் 2.87%, இசுலாம் 0.67% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.98% ஆக உள்ளனர்.



Thumb

பாக்மதி மாநிலத்தில் சமயம்

  பிறர் (0.98%)

சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்

பாக்மதி மாநிலத்தின் 13 மாவட்டங்கள்

பாக்மதி மாநிலம் 13 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

1. தோலகா மாவட்டம்
2. ராமேச்சாப் மாவட்டம்
3. சிந்துலி மாவட்டம்
4. காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
5. சிந்துபால்சோக் மாவட்டம்
6. ரசுவா மாவட்டம்
7 நுவாகோட் மாவட்டம்
8. தாதிங் மாவட்டம்
9. சித்வன் மாவட்டம்
10. மக்வான்பூர் மாவட்டம்
11. பக்தபூர் மாவட்டம்
12. லலித்பூர் மாவட்டம்
13. காத்மாண்டு மாவட்டம்

அரசியல்

இம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்களில் 66 உறுப்பினரகள் நேரடித் தேர்தலிலிலும், 44 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 33 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

முதலமைச்சர்

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியக் கூட்டணி அரசின் தலைவர், தேர்மணி பௌதேல் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். [3]

Remove ads

மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

இம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 81 இடங்களையும், நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 29 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மேலதிகத் தகவல்கள் அரசியல் கட்சி, நேரடித் தேர்தலில் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads