சியாங் ராய், தாய்லாந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியாங் ராய் (Chiang Rai) (தாய்: เมืองเชียงราย, தாய்லாந்து நாட்டின் வடகோடியில் உள்ள சியாங் ராய் மாகாணாத்தின் தலைநகரமும், முயியாங் சியாங் ராய் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். இந்நகரத்தை மன்னர் மங்ராய் கிபி 1262ல் நிறுவினார்.[1]:208 உலகில் அதிக அளவில் அபின் உற்பத்தியாகும் தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும்.
Remove ads
வரலாறு

மங்ராய் வம்ச மன்னர்களின் தலைநகராக சியாங் ராய் நகரம் விளங்கியது. சியாங் ராய் நகரம் பின்னர் பர்மாவின் ஆட்சியில் பல நூற்றாண்டுகளாக இருந்தது. 1899ல் தாய்லாந்து மன்னர் சியாங் ராய் நகரத்தை கைப்பற்றி, 1933ல் சியாங் ராய் மாகாணத்தை நிறுவினார்.
புவியியல்
கோக் ஆற்றின் வண்டல் மண் சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 390மீட்டர் உயரத்தில் உள்ள சியாங் ராய் நகரம், வடக்கில் தாயின் லாவோ மலைத்தொடருக்கும், தெற்கில் பி பான் நாம் மலைத்தொடருக்கும் நடுவில் அமைந்துள்ளது. லாவோ ஆறு சியாங் ராய் நகரத்தின் தெற்கில் பாய்கிறது.
சியாங் ராய் நகரம், பாங்காக் நகரத்திற்கு வடக்கில் 860 கி.மீ. தொலைவிலும், சியாங் மாய் நகரத்திற்கு வடகிழக்கில் 200 கி.மீ. தொலைவிலும், மியான்மர் எல்லைக்கு தென்மேற்கில் 62 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள நகரஙகளில் ஒன்றாகும்.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
60.85 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சியாங் ராய் நகரத்தின், 2012ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சியாங் ராய் நகர மக்கள்தொகை 69,888 ஆகும். சியாங் ராய் நகர மக்கள்தொகையில் 12.5% தாய்லாந்து மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார்.
தட்பவெப்பம்
சியாங் ராய் நகரம் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை கொண்டது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு Aw).
குளிர்காலம் வறட்சியாகவும், சிறிது வெப்பமாகவும் இருக்கும். கோடைக்கால சராசரி வெப்பம் 34.9 °C ஆகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பலத்த பருவமழை பெய்கிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads