சிறிசாந்த்
இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தகுமாரன் சிறிசாந்த் (Shanthakumaran Sreesanth (ⓘ, ),பிறப்பு: பிப்ரவரி 6 1983), முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் விளையாடினார். வலது கை விரைவு வீச்சாளரான இவர் வலது கை இறுதிக்கட்ட மட்டையாளரும் ஆவார். கேரளா மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2006 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.[1] பிக் பிக்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Remove ads
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள்
சிறிசாந்த் , இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் புதிய பந்தில் வீசிய இவர் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோரது இலக்கினை வீழ்த்தினார்.[2][3] பின் இரு ஆட்டங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிறகு நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது போட்டியில் இவருக்கு அணியின் பயிற்சியாளரான கிறெக் சப்பல் வாய்ப்பு வழங்கினார்.[4] பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை. பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடினார். கராச்சியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 58 ஓட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளை வீழ்த்தினார்.ஏப்ரல், 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் அனியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 55 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மேலும் மொத்தமாக 10 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.3 ஆக இருந்தது.[5]
இவரின் அதிகபட்சமான பந்துவீச்சு சராசரியினால் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார். இவருக்குப் பதிலாக ஆர் பி சிங் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் அஜித் அகர்கருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு அந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளைணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிரவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 5 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பின் இறுதிப்போட்ட்டியில் விளையாடிய இவர் 8 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்
Remove ads
தேர்வுத் துடுப்பாட்டம்
2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் சாகீர் கான் தேர்வானார். ஆனால் அவர் காயம் காரணமாக வெளியேற அந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இவர் 95 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் இவர் இர்பான் பதானுடன் துவக்க ஓவர்களை வீசினார்.[6] மொகாலி அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அந்து இலக்குகளையும் மட்டையாட்டத்தில் 29 ஓட்டங்களையும் எடுத்தார். இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அதிலும் இவர் இர்பான் பதானுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். அந்தத் தொடரில் முன்னணி வேகப் பந்து வீச்சளராக கவனம் பெற்றார். இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் ஜமைக்கா கிங்ஸ்டனில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 72 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[7]
2006 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது.அதில் ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதற்கு முன்பாக இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 4-0 எனும் கணக்கில் இழந்திருந்தது. அந்தப் போட்டியில் 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணியினை 84 ஓட்டங்களில் ஆட்டன்மிழக்கச் செய்ய உதவினார்.
Remove ads
இந்தியன் பிரீமியர் லீக்
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் கில்கிறிஸ்ட் தலைமையிலான ராஅஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடினார். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாம் ஐபிஎல் தொடரில் இவர் அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்களின் பட்டியலில் சொஹைல் தன்வீர்க்கு அடுத்த படியாக இரண்டாம் பெற்றார். அத் தொடரின் முடிவில் இவர் 18 இலக்குகளைக் கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டில் நடைபெற இரண்டாம் பருவத்தில் இவர் பாதி போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2010 ஆம் ஆண்டில் கிங்சு லெவன் பஞ்சாப் அணிக்காகவும், 2011 ஆம் ஆண்டில் கொச்சி அணிக்காகவும் விளையாடினார். 2012 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அந்தத் தொடரில் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. 2013 ஆம் ஆண்டில் இவரை மீண்டும் ராஅஸ்தான் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. ஆனால் சூதாட்டப் புகார் தொடர்பாக அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்பட்டது.[8]
ப இ20 வாகையாளர் போட்டி
2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு இருபது20 வாகையாளர் போட்டித் தொடரில் இவர் இந்திய அணி சார்பாக தேர்வானார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான காலிருதிப் போட்டியில் முன்னணி வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மாத்யூ ஹய்டன் இலக்கினைக் கைப்பற்றினார்.அந்த இலக்கினை வீழ்த்தியதும் அது ஆட்டத்தின் போக்கினை மாற்றியது. அந்தப் போட்டியில் 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். அந்த ஆண்டின் சிறந்த ப இ20 பந்து வீச்சாக இதனை ஈ எஸ் பி என் கிரிக் இன்போ வலைதள ரசிகர்கள் தேர்வு செய்தனர்.[9] பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இறுதி இலக்கினை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.

Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads