குமார் சங்கக்கார
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமார் சங்கக்கார (Kumar Sangakkara; சிங்களம்: කුමාර සංගක්කාර; பிறப்பு: 27 அக்டோபர் 1977) முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும் ,தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1][2] மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.[1][3][4][5][6][7] இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார்.[8] இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இவர் இங்கிலாந்தின் வோக்விசயர் மாகாண அணிக்கும் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கும் விளையாடி வருகின்றார்.
இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் குச்சக் காப்பாளராகவும் இருந்துள்ளார். குச்சக் காப்பாளராக பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளார்.[9][10]
சங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள் , நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[11][12] 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார்.
2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அணி முதன்முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார்.
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 8,000, 9,000, 11,000 மற்றும்12,000 ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 ஓட்டஙகளை விரைவாக எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[13] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2012 ஆம் ஆண்டிலும் , சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே ஆண்டிலும் பெற்றார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[14] எல் ஜி மக்கள் விருதினை 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக லெவன் அணிகளில் ஆறு முறையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலக லெவன் அணிகளில் மூன்று முறையும் இவர் இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டின் முன்னணித் துடுப்பாட்டக் காரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை அறிவித்தது.
தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகின்றார்.
பிக்பாஸ் T20 போட்டியில் ஹார்பர்ட் ஹரிக்கான்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்
Remove ads
வீரர் புள்ளிவிபரங்கள்
துடுப்பாட்ட சாதனைகள்
■ப்ராட்மானுக்கு அடுத்ததாக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்
■உலககிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர்
■சச்சின் டெண்டுல்கர் இற்கு அடுத்ததாக அதிக மொத்த ஓட்டங்கள் பெற்றவர்
தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்
பின்வரும் அட்டவணை, குமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்
- ஓட்டங்கள்" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.
ஒருநாள் துடுப்பாட்ட சதங்கள்
Remove ads
புதிய தரவுகள் செப்டெம்பர் 18, 2013 உள்ளபடி
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30
- விளையாடிய இனிங்ஸ்: 28
- ஆட்டமிழக்காமை: 6
- ஓட்டங்கள்: 991
- கூடிய ஓட்டம்: 111
- சராசரி: 45.04
- 100கள்: 1
- 50கள் :7,
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333
- விளையாடிய இனிங்ஸ்: 312
- ஆட்டமிழக்காமை: 32
- ஓட்டங்கள் :10842
- கூடிய ஓட்டம் 138(ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 38.72,
- 100 கள்: 14
- 50கள்: 73
*இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 429,
- விளையாடிய இனிங்ஸ்: 404
- ஆட்டமிழக்காமை: 42
- ஓட்டங்கள்: 14603
- கூடிய ஓட்டம்: 156 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 40.33,
- 100கள்: 22,
- 50கள்: 94.
Remove ads
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயல்திறன்
ஏழு ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார். தனது அணி தோல்வியற்ற காலிறுதி ஆட்டத்தின் முடிவில், இந்த உலகக்கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மட்டையாளராக இருந்தார்.
வெளியிணைப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads