சிறிய காட்டு ஆந்தை

From Wikipedia, the free encyclopedia

சிறிய காட்டு ஆந்தை
Remove ads

சிறிய காட்டு ஆந்தை (Jungle owlet, அறிவியல் பெயர்: Glaucidium radiatum) என்பது இந்திய துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்ட ஆந்தை ஆகும். இந்த இனம் பெரும்பாலும் தனித்தோ, இணையாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். மேலும் இவை பொதுவாக விடியற்காலையிலும், அந்தி வேளையிலும் இவற்றின் அலறளால் கண்டறியப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இரண்டு கிளையினங்கள் சில சமயங்களில் முழு இனமாகக் கருதப்படுகின்றன.

விரைவான உண்மைகள் சிறிய காட்டு ஆந்தை, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

Thumb
கேரளத்தில் G. r. malabaricum

இந்த சிறிய ஆந்தை வட்ட வடிவமான தலையைக் கொண்டுள்ளது. உடலின் மேல் பட்டைகளைக் கொண்டுள்ளது. இறக்கைகள் பழுப்பு நிறமாகவும், வால் வெள்ளை நிறத்தில் குறுகலான பட்டைகள் கொண்டதாகவும் இருக்கும். இதில் இரண்டு கிளையினங்கள் உள்ளன, ஒரு கிளையினம் இந்தியா மற்றும் இலங்கையின் சமவெளிகளில் காணப்படுகிறது. இரண்டாவது கிளையினமான மலபார் சிறிய காட்டு ஆந்தை (G. r. malabaricum) மேற்கு தொடர்ச்சி மலையின் காணப்படுகிறது, அது சிறிய வாலையும், தலையில் மிகுந்து பழுப்பு நிறத்தையும் கொண்டதாக உள்ளது. பிந்தையதை முழு இனம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.[3]

சிறிய காட்டு ஆந்தை மேல் பகுதிகளில் உள்ள இறகுகள் அடர் கரும்-பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறப் பட்டைகளுடன் உள்ளது. இதன் மார்பும் வயிறும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிறு கீற்றுக்கள் கொண்டவை. கன்னம், மேல் மார்பகம், அடிவயிற்றின் மையம் ஆகிய இடங்களில் வெண்மையான திட்டுகள் உள்ளன. கருவிழி மஞ்சள் நிறத்தில் உள்ளது.

இலங்கையில் காணப்படும் கஷ்கொட்டை முதுகு ஆந்தை (Glaucidium castanonotum) ஒரு காலத்தில் இதன் ஒரு கிளையினமாக சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இது முழு இனமாக உயர்த்தப்பட்டது. அது ஈர மண்டலத்தில் காணப்படுகிறது, அதேசமயம் சிறிய காட்டு ஆந்தை வறண்ட காடுகளில் காணப்படுகிறது.[3]

Remove ads

வாழ்விடமும் பரவலும்

இவை புதர்க்காடுகள் முதல் இலையுதிர் மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள் வரையிலான வாழ்விடங்களில் காணப்படுகின்றன. இவை இமயமலையின் தெற்கிலும், இமயமலையின் சில பகுதிகளிலும் 2,000 மீ (6,600 அடி) உயரம் வரை காணப்படுகின்றன. மேற்கில் டல்ஹவுசியிலிருந்து கிழக்கே பூட்டான் இதன் வாழ்விடம் வரை பரவியுள்ளது.[4]

நடத்தையும் சூழலியலும்

இவை காலை மாலை நேரங்களில் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு தத்துக்கிளி, வெட்டுக்கிளி சில்வண்டு சிறு பறவைகள் ஆகியவற்றை இரையாகத்தேடித் தின்னும். மேக மூட்டமான நாட்களில் பகல் முழுதும் சுறுசுறுப்பாக வேட்டையாடும். பகல் நேரத்திலும் ஒலி எழுப்பும், பறக்கும். கோ.குக் கோ.ஓகுக் என ஐந்து வினாடிகள் தொடர்ந்து கத்தும். யாரேனும் பார்க்கிறார்கள் எனத் தொரிந்தவுடன் எழுந்து பறந்து வேறொரு மரத்தில் சென்று தலையை மட்டும் திருப்பி வந்தவர்கள் தன்னைத் தொடர்கின்றார்களா எனக் கவனிக்கும். வால்காக்கை, நீண்டவால் கரிச்சான் ஆகியவற்றுடன் சேர்ந்தும் இரை தேடக் காணலாம். இவை மரப் பொந்துகளில் தங்கி இருக்கும். இடையூறு ஏற்படும் போது இவை உறைந்து மரக் கட்டை போல் தோன்றும்.

இந்தியாவின் இதன் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் மே வரை. இவை மரப்பொந்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். குக்குறுவான் மரங்கொத்தி ஆகியவற்றின் பொந்துகளை பயன்படுத்தும்.[5]

மேற்கோள்கள்

வெளி இணப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads