சிலியாவ்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிலியாவ் என்பது (மலாய்: Siliau; ஆங்கிலம்: Siliau; சீனம்: 西廖) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.[1]
சிரம்பான் நகரில் இருந்து 28 கி.மீ; போர்டிக்சன் நகரில் இருந்து 18 கி.மீ; ரந்தாவ் நகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. சிலியாவ் புறநகர்ப்பகுதி எண்ணெய் பனை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது. [2]
சிலியாவ் பகுதியில் நிறைய எண்ணெய் பனை தோட்டங்கள் இருப்பதால், தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாகக் காணப் படுகிறது. தமிழர்கள் 1850-ஆம் ஆண்டுகளில் குடியேறினார்கள். முதன்முதலில் மலாயாவில் தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்றாகும்.[3][4] தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த இடத்திற்கு உண்டு.
Remove ads
வரலாறு
1850-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நூற்றுக் கணக்கான கரும்பு, காபி, மிளகு தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டன. பெரும்பாலான தோட்டங்கள் பினாங்கு; செபராங் பிறை; பேராக் கிரியான், நெகிரி செம்பிலான் பகுதிகளில் இருந்தன. கரும்பு தோட்டங்கள் தான் மிகுதி. இந்தத் தோட்டங்கள் மலாயாவிலேயே மிக மிகப் பழமையான தோட்டங்கள்.
ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் கரும்புத் தோட்டங்கள் தான் மலாயாவில் பிரதான தோட்டங்களாக இருந்தன. 1896-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.[5]
Remove ads
சிலியாவ் புறநகர்ப் பகுதியில் தமிழ்ப்பள்ளிகள்
சிலியாவ் புறநகர்ப் பகுதியில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 165 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
Remove ads
ஸ்ரீ முருகன் ஆலயம் சிலியாவ்

சிலியாவ் இரயில் நிலையத்திற்கு அருகில் சிலியாவ் ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வரும் இந்துக்கள் ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். 1970-ஆம் ஆண்டு முதல் முருகனின் கார்த்திகை திருவிழாவை விமரிசையுடன் கொண்டாடி வருகிறார்கள்.[11]
1967-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரயில்வே நிலத்தில், மலாயா இரயில்வே அதிகாரியாக பணியாற்றிய எஸ். ராமையா என்பவரின் தலைமையில் இந்த ஆலயம் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ். பக்கிரிசாமி என்பவரும் இந்த ஆலயத்தின் நற்பணிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார்.
1987-ஆம் ஆண்டில், மறைந்த முருக பக்தர் கிருபானந்த வாரியார், இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்றி உள்ளார். 1997-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் செயலாளர் செல்வராஜ்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads