ரந்தாவ்

மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

ரந்தாவ்map
Remove ads

ரந்தாவ் என்பது (மலாய்: Rantau; ஆங்கிலம்: Rantau; சீனம்: 晏斗) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.[1]

விரைவான உண்மைகள் ரந்தாவ், நாடு ...

சிலியாவ் நகரில் இருந்து 8 கி.மீ.; சிரம்பான் நகரில் இருந்து 16 கி.மீ.; போர்டிக்சன் நகரில் இருந்து 20 கி.மீ.; காஜாங் நகரில் இருந்து 49 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 69 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.[2]

கோலா சாவா, சிலியாவ், பெடாஸ் ஆகிய நகரங்களின் குக்கிராமங்களால் இந்த ரந்தாவ் நகரம் சூழப்பட்டு உள்ளது. தவிர ரந்தாவ் புறநகர்ப் பகுதிகளில் பல எண்ணெய்ப் பனைத் தோட்டங்களும் உள்ளன.

Remove ads

வரலாறு

1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் தோட்டம் (Linsum Estate); மலாயாவிலேயே மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் வரலாறு படைத்து உள்ளது.

முதன்முதலில் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்தார்கள். லாபகரமாக அமையவில்லை. அதனால் காபி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பரின் பக்கம் மாற்றிப் பார்த்தார்கள்.[3][4]

ரந்தாவ் லின்சம் காபி தோட்டம்

1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது.[5]

மலாக்கா நீரிணையைப் பயன்படுத்திய படகுகள்; கப்பல்கள்; சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்குச் செல்லும் போது லிங்கி, லுக்குட், போர்டிக்சன் படகுத் துறைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றன.

லிங்கி முகத்துவாரம்

லிங்கி முகத்துவாரம் அதிக அலைகள் இல்லாத இடமாக இருந்து உள்ளது. பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; அதன் பின்னர் வந்த டீசல் கப்பல்கள்; அணைவதற்கு லிங்கி லுக்குட் பகுதிகள் பாதுகாப்பான படகுத் துறைகளாக விளங்கி உள்ளன[6]

1870 - 1900-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன.

காபி ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு மரவெள்ளி, சர்க்கரைவல்லி உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன. அந்தத் தோட்டங்களில் மலாயா தமிழர்கள் தான் வேலை செய்து இருக்கிறார்கள்.[7]

Remove ads

ரந்தாவ் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

ரந்தாவ் வட்டாரத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 355 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

பிரபலங்கள்

சில பிரபலமான நபர்களை வழங்கிய பெருமை ரந்தாவ் நகரத்திற்கு உள்ளது.

முகமது அசான் (Chief Minister of Negeri Sembilan Mohamad Hasan); நெகிரி செம்பிலான் முன்னாள் முதல்வர்;[12]

டத்தோ வி.எஸ். மோகன்; நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்;[13]

மலர் ராஜாராம்; கனடாவில் மலாய் மொழி வானொலி தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் சேவை செய்து தாயகம் திரும்பி, 2019-ஆம் ஆண்டு ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிட்டவர்.[14]

மகா சின்னத்தம்பி; ரந்தாவில் பிறந்தவர். தற்சமயம் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பகுதியில் மிகப்பெரிய வீடு கட்டுமானத் தொழில் அதிபர் (Australian developer of Greater Springfield Development in Queensland). இவரின் இப்போதைய சொத்து மதிப்பு $1.78 பில்லியன் அமெரிக்க டாலர்.[15]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads