சிவக்குமார் சர்மா

From Wikipedia, the free encyclopedia

சிவக்குமார் சர்மா
Remove ads

பண்டிட் சிவக்குமார் சர்மா (Shivkumar Sharma, 13 சனவரி 1938[2] – 10 மே 2022)[3] சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய இசையமைப்பாளரும், சந்தூர் இசைக்கலைஞருமாவார்.[4][5] சாந்தூர் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியாகும்.[6]

விரைவான உண்மைகள் பண்டிட் சிவக்குமார் சர்மா, பின்னணித் தகவல்கள் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் சம்முவில் உமா தத் சர்மா என்ற பாடகருக்கு பிறந்தார்.[7] தோக்ரி இவரது தாய்மொழியாகும். இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது இவரது தந்தை இவருக்கு குரலிசையிலும், கைம்முரசு இணையிலும் கற்பிக்கத் தொடங்கினார். சிவக்குமார் தனது பதின்மூன்று வயதில் சந்தூர் கற்கத் தொடங்கினார். 1955 இல் மும்பையில் தனது முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார்.

தொழில்

Thumb
1988 இல் சர்மா

சந்தூரை ஒரு பிரபலமான இசைக் கருவியாக மாற்றிய பெருமை இவருக்குண்டு.[8] 1956 இல் சாந்தாராமின் ஜனக் ஜனக் பாயல் பாஜே என்ற படத்தில் ஒரு காட்சிக்கு பின்னணி இசையமைத்தார். இவர் தனது முதல் தனி இசைத் தொகுப்பை 1960 இல் பதிவு செய்தார்.

1967 ஆம் ஆண்டில், இவர் புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌராசியா மற்றும் கிதார் கலைஞர் பிரிஜ் பூசண் கப்ரா ஆகியோருடன் இணைந்து கால் ஆஃப் தி வேலி (1967) என்ற ஒரு இசைத் தொகுப்பை தயாரித்தார். இது இந்திய பாரம்பரிய இசையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியது.[9] சில்சிலா [10] (1980) தொடங்கி ஹரிபிரசாத் சவுராசியாவுடன் [11] இணைந்து பல இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் சிவ்-ஹரி இசை இரட்டையர் என்று அறியப்பட்டனர். பாசில் (1985), சாந்தினி (1989), லாம்ஹே (1991) மற்றும் டார் (1993) போன்ற பெரிய இசை வெற்றிகளாக இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள் இருந்தன.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர், மனோரமா என்பவரை மணந்தார் [12][13] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[14] இவரது மகன், இராகுலும்,[15][16] ஒரு சந்தூர் இசைக்கலைஞராவார்.[17][18] மேலும் இவர்கள் 1996 முதல் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். 1999 இல் rediff.com என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சிவக்குமார், "கடவுளின் பரிசு" இருப்பதாக நினைத்ததால், தனது மகன் இராகுலை தனது சீடனாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.

விருதுகள்

Thumb
குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட சங்கீத நாடக அகாதமி கூட்டாளர், சங்கீத நாடக அகாதமி விருதுகள் -2011 விழாவில் பண்டிட் சிவக்குமார் சர்மாவுக்கு பிரணாப் முகர்ஜி விருதினை வழங்குகிறார்

சிவக்குமார் 1985இல் அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரத்தின் கௌரவ குடியுரிமை உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.[19] 1986 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது,[20] 1991 ல் பத்மசிறீ, 2001இல் பத்ம விபூசண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.[21]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads