சிவப்பதிகாரம்
கரு பழனியப்பன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவப்பதிகாரம் (Sivappathigaram) திரைப்படம் 2006-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கரு பழனியப்பன் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் விஷால், மம்தா மோகன்தாஸ், ரகுவரன், உபேந்திரா, மணிவண்ணன், ராஜன் பி.தேவ், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். இது மம்தா மோகன்தாஸின் முதல் தமிழ் திரைப்படமாகும். பின்னர், இந்த படம் இந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஆஜ் கா நயா கமினா என்ற பெயருடன் வெளிவந்தது.
Remove ads
நடிகர்கள்
- விஷால் - சத்யமூர்த்தி
- மம்தா மோகன்தாஸ் - சாருலதா
- ரகுவரன் - பேராசிரியர் இளங்கோ
- உபேந்திரா - காவல் ஆய்வாளர்
- மணிவண்ணன் - சத்யமூர்த்தியின் தந்தை
- ராஜன் பி.தேவ் - இதய பெருமாள்
- கஞ்சா கருப்பு - வெள்ளை
- சபரீஷ் - சத்யமூர்த்தியின் நண்பன்
கதைச்சுருக்கம்
கல்லூரி படிப்பில் இருக்கும் தன் மகள் சாருலதாவுடன், பேராசிரியர் இளங்கோ (ரகுவரன்) தேனி அருகில் இருக்கும் தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவரது பேராசிரியர் பணியிலிருந்து தன்னார்வ ஒய்வுப் பெற்று பூர்வீகவீட்டில் வாழ வந்தார். அங்கே நாட்டுப்புற பாடல்களில் ஆராய்ச்சி நடத்தி, ஒரு நூலாக வெளியிட திட்டமிட்டார். அவரது மாணவன் சத்யமூர்த்தி (விஷால்) அவரது ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்தான். சத்யமூர்த்தியின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு அவன் வசம் காதல் கொண்டாள் சாருலதா.
அந்நிலையில் மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தன. வேட்புமனுவை தாக்கல் செய்ய தொடங்கியபோது, சில அச்சமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கிய கட்சிகளின் சில வேட்பாளர்கள் கொல்லப்பட்டதால், அனைத்து வேட்பாளர்களும் நிலைகுலைந்து வேட்பு மனுவை திரும்பப்பெற்றனர். கட்சிகள் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட, காவல் துறை கொலையாளியை தேடினர். இந்த சம்பவங்களால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
காவல் துறை தீவிரமாக தேடி, கொலையாளி சத்யமூர்த்தி தான் என்று கண்டுபிடித்தனர். மேலும் இக்குற்றங்களுக்கு இளங்கோ உதவியாக இருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம், ஹைதெராபாத் பயணத்தின் போது, சாரு மனம் திறந்து தனது எண்ணங்களை சத்யாவிடம்வெளிப்படுத்தினாள். சத்யா தானும் பேராசிரியர் இளங்கோவும் எதனால் இந்த குற்றங்களை செய்தோம் என்று அனைத்து உண்மைகளையும் சாருவிடம் கூறினான் சத்யா.
போலீஸின் வலையிலிருந்து தப்பித்து, மந்திரியை கொல்ல முயன்றான் சத்யா. அவனது முயற்சி வெற்றி பெற்றதா என்பது தான் மீதி கதை.
Remove ads
இசை
இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர் ஆவார். யுகபாரதி மற்றும் பா.விஜய் இப்படத்தின் பாடல்களை எழுதினர்.
விமர்சனங்கள்
ரெடிப்.காம் முட்டாள்தனமான படம் என்று கூறி மதிப்பீடு அளித்தனர்.[1] நவ் ரன்னிங்.காம்
மதிப்பீடுகளை வழங்கியது.[2] ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "கஞ்சா கருப்பின் இயல்பான காமெடி, படத்துக்கு ப்ளஸ். ‘அற்றைத் திங்கள்’ பாடலில் ராஜீவன், கோபிநாத், வித்யாசாகர், யுகபாரதி எனக் கூட்டணி கொடி பறக்கிறது. ஊருக்கு நல்லது சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார்கள். சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால், சிவப்புக்குச் சேர்ந்திருக்கும் சிறப்பு!" என்று எழுதி 40100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads