சிவ. வீ. மெய்யநாதன்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவ. வீ. மெய்யநாதன் (Siva. V. Meyyanathan) என்பவர் தமிழக அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். 2016 மற்றும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக திமுக கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் [1][2]. எம்.சி.ஏ பட்டப்படிப்பை படித்துள்ள இவர் புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்[3]. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக 2011 முதல் 2016 வரை இருந்துள்ளார் [4] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். பின்னர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்ம தங்கவேலு என்ற வேட்பாளரைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை (சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, ) அமைச்சசராக பதவியேற்றார்.[5]

விரைவான உண்மைகள் சிவ. வீ. மெய்யநாதன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ...
Remove ads

துறை மாற்றங்கள்

14 திசம்பர் 2022 ஆம் ஆண்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி சட்டப்பேரைவ உறுப்பினரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றதை அடுத்து மெய்யநாதன் கவனித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த இவர் 29 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதில் பல அமைச்சர்களின் இலாக்கக்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. தற்போது பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[6][7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads