சீன நாட்காட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.[1]. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா (春節), டுயான் வு பண்டிகை, மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.
சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி(எளிய சீனம்: 夏历; மரபுவழிச் சீனம்: 夏曆; பின்யின்: xiàlì) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது.
சீன நாட்காட்டியை "விவசாய நாட்காட்டி" (எளிய சீனம்: 农历; மரபுவழிச் சீனம்: 農曆; பின்யின்: nónglì) கிரெகொரியின் நாட்காட்டியை "பொது நாட்காட்டி" (எளிய சீனம்: 公历; மரபுவழிச் சீனம்: 公曆; பின்யின்: gōnglì) என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" (எளிய சீனம்: 阴历; மரபுவழிச் சீனம்: 陰曆; பின்யின்: yīnlì) எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" (எளிய சீனம்: 阳历; மரபுவழிச் சீனம்: 陽曆; பின்யின்: yánglì)எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை புதிய நாட்காட்டி (எளிய சீனம்: 新历; மரபுவழிச் சீனம்: 新曆; பின்யின்: xīnlì) எனவும் சீன நாட்காட்டியை பழைய நாட்காட்டி(எளிய சீனம்: 旧历; மரபுவழிச் சீனம்: 舊曆; பின்யின்: jiùlì) எனவும் கூறுவதும் உண்டு.
2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது.
ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் (十二生肖 shí'èr shēngxiào, "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது 十二屬相
shí'èr shǔxiàng, "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox),புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig). தற்போதைய ஆண்டு (ஜனவரி 31, 2014 முதல் பிப்ரவரி 18, 2015 வரை) குதிரையின் Wǔnián ஆண்டாகும்.
Remove ads
நவீன ஹான் நாட்காட்டி
சூரியன் மற்றும் நிலவு
சந்திர சுற்றுப்பாதையின் முறையற்ற தண்மை கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதலே அறியப்படுகிறது என்றாலும், 619ஆம் ஆண்டு வரை மாதங்களின் துவக்கம், சூரியன் மற்றும் சந்திரனின் சராசரி இயக்கத்தை பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.
ஹான் நாட்காட்டி அமைப்பு
கூறுகள்
- நாள் - நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரை
- மாதம் - ஒரு அம்மாவாசையிலிருந்து அடுத்த அம்மாவாசை வரை, சுமார் (29 + 17/32) நாட்கள்.
- தேதி - மாதத்தில் இருக்கும் ஒரு நாள், 1 முதல் 30 வரை வரிசைப்படுத்தியிருக்கும்
- வருடம் - ஒரு வசந்த காலம் தொடக்கத்திலிருந்து அடுத்த வசந்த காலம் வரை. சுமார் (365 + 31/128) நாட்கள்
- ராசி - 1/12 வருடம், அதாவது சுமார் (30 + 7/16) நாட்கள்
இந்து நாட்காட்டியைப் போலவே, சீன நாட்காட்டியும் சூரியசந்திர நாட்காட்டயே.
நாள் ( ri, 日)
சீன நாட்காட்டியில் ஒரு நாள் என்பது கிரிகோரியன் நாட்காட்டியில் உள்ளது போல நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை கணக்கிடப்படும்.
ஒரு நாளின் உட்பிரிவுகள்
நவீன சீனாவில் ஒரு நாளை, மேற்கத்திய பாணியில் மணி-நிமிடம்-நொடி என பிரித்துள்ளனர். ஆனால் பழைய தரம் இன்னும் சில வேளைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வாரம்
நாட்கள் பல்வேறு வகையான வாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவை
- வழக்கமான வகையில் ஏழு நாட்கள் கொண்ட வாரம்.
- நவீன கால சீனாவில் பயன்படுத்தப்படுத்தப்படும் எண்களால் தீர்மானிக்கப்படும் வாரம். (星期一, முதல் நாள்; 星期二, இரண்டாம் நாள்; 星期三, மூன்றாம்-நாள்; 星期四, நான்காம் நாள்; 星期五, ஐந்தாம் நாள்; 星期六, ஆறாம் நாள்). இதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு. (星期日, ஞாயிற்றுக்கிழமை)
- ஒவ்வொறு நான்கு வாரமும் 28 நாட்களை கொண்ட வாரமாக கொள்ளப்படும்.
- 10 நாட்கள் கொண்ட வாரம்.
- 12 நாட்கள் கொண்ட வாரம்.
விடுமுறை தினங்கள்
சீன நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒன்பது முக்கிய திருவிழாக்கள் உள்ளன. இவற்றில் ஏழு திருவிழாக்கள் நிலவு நாட்காட்டியை கொண்டும், மற்ற இரண்டு திருவிழாக்கள் சூரிய விவசாய நாட்காட்டியினை கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. பாரம்பரிய நிலவு நாட்காட்டியின் துல்லியமற்றத்தன்மையினால் விவசாயிகள் உண்மையில் பயிர்களை பயிரிடும் காலத்தை தீர்மானிக்க சூரிய நாட்காட்டியை பயன்படுத்தினர். இருப்பினும் பாரம்பரிய நிலவு நாட்காட்டியே விவசாயிகளின் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. க்விங் மிங் திருவிழா மற்றும் குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழா ஆகியவை முக்கியமான விடுமுறை தினங்கள் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
கூடுதலாகக் காண்க
செயலிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads